கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 12, 2011

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி வெற்றிவிழா பொதுக்கூட்டம்


திமுக சார்பில், தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் 19ம் தேதி நடைபெறுகிறது.
திமுக தலைமை கழகம் 11.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ஜெயலலிதாவின் காழ்ப்புணர்வு எண்ணத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதியன்று சமூக நீதி காத்திடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
திராவிடர் இயக்க பாதுகாவலர் கருணாநிதிக்கு கிடத்த வெற்றியாக மக்கள் மனம் மகிழ திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் நாடெங்கும் கொண்டாடினர். மேலும், வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக சொற்பொழிவாளர்கள் அவர்களுக்கென்று குறிப்பிடப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர், மாவட்ட நிர்வாகிகள் துணையோடு கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும். தென்சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர். திருவள்ளூரில் திமுக பொது செயலாளர் அன்பழகன், காஞ்சிபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர். அதேபோல, தமிழகத்தில் 34 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

கோவையில் செல்வேந்திரனும், நீலகிரியில் முல்லைவேந்தனும், ஈரோட்டில் குழந்தை தமிழரசனும், திருப்பூரில் கோவி. செழியனும் பேசுகின்றனர்.

மதுரை நகரில் நடைபெறும் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் கோவை மு.ராமநாதனும் புறநகரில் நெல்லிக்குப்பம் புகழேந்தியும் பங்கேற்கின்றனர். இதேபோல் திண்டுக்கல்லில் கடலூர் இள.புகழேந்தி, தேனியில் கே.பி.ராமலிங்கம், சிவகங்கையில் குத்தாலம் கல்யாணம், ராமநாதபுரத்தில் கம்பம் செல்வேந்திரன், விருதுநகரில் குத்தாலம் அன்பழகன் பங்கேற்கின்றனர். குமரியில் நடைபெறும் பொதுக்கூட்ட த்தில் பொன். முத்துராமலிங்கம் பேசுகிறார்.

திருச்சியில் துரைமுருகன், தஞ்சையில் திருச்சி என்.சிவா எம்பி, திருவாரூரில் தங்கம் தென்னரசு, நாகையில் இந்திரகுமாரி, அரியலூரில் செல்வகணபதி, கரூரில் முத்துச்சாமி, பெரம்பலூரில் வி.பி.ராசன் ஆகியோர் பேசுகின்றனர்.

வேலூரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தி.மலையில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி பேசுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment