கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

மண்ணெண்ணெய் விலை உயர்வும் இந்த ஆட்சியின் சாதனைதான் - கலைஞர்


மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியிருப்பது ஜெயலலிதா ஆட்சி சாதனைகளில் ஒன்றாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 03.08.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில்கள் வருமாறு:
தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் 5544 இலங்கைத் தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியமாக வழங்க ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும்.


கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.


இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.


கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.


2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.


திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அதிமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்து இலங்கை தமிழர்களுக்கு அதிக உதவி செய்தது எந்த ஆட்சி என்பதை முடிவு செய்யலாம்.


நில அபகரிப்பு என்ற புகார்கள் வேண்டுமென்றே சொல்லப்படுவதாக எல்லோரும் சொல்கிறார்களே?
அ.தி.மு.க. வினர் மீது நில அபகரிப்பு புகார்கள் உண்மையாக வந்தால் கூட காவல் துறையினர் அதைப் பற்றி வழக்கு பதிவு செய்யாமல், அமைச்சர்களைக் கொண்டு புகார் மனு கொடுத்தவர்களையே அழைத்துப் பேசி சமாதானம் செய்து புகார் மனுக்களைத் திரும்பப் பெறச் செய்து விடுகிறார்கள். அத்தகைய செய்திகளும் ஏடுகளிலே வருகின்றன. ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.கழகத்தினர் மீது புகார் கூறினால், அதைப் பெரிதுப டுத்தி வழக்கு பதிவு செய்து கைது செய்கிறார்கள்.
மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியிருக்கிறார்களே?
ஜெ. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தானே ஆகிறது? அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளிலே இதுவும் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஜூலை 31ம் தேதி வரை மண்ணெண்ணெய் ஒரு லிட்டர்
^11.40என்ற விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலையைத்தான் ஜெயலலிதாவின் அரசு லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தி, லிட்டர்^13.40என்று நிர்ணயித்துள்ளது.
இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு அரசின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறதே?
ஆகஸ்ட் 4ம் தேதியன்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நிதி அமைச்சரால் பேரவையிலே வைக்கப்படும் என்று ஆளுநர் அறிவித்திருக்கிறார். 4ம் தேதி பேரவை கூடும் என்ற அறிவிப்பும் ஏடுகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இந்தத் திட்டம் பற்றி அரசின் சார்பில் அறிவிப்பு வந்திருக்கிறது என்றால், ஆளுநர் அறிவிப்புக்கும், நிதி நிலை அறிக்கைக்கும் மற்றும் பேரவைக்கும் இந்த அரசு எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சுமார் ^4000கோடிக்கான புதிய வரி அறிவிப்பையே பட்ஜெட் படிக்க நாள் குறித்து அறிவித்ததற்குப் பிறகு தன்னிச்சையாக செய்து விட்டு, பிறகு அந்த வரி உயர்வால் பாதிக்கப்பட நேரிடுமென்று கருதிய வியாபாரிகளும், முதலாளிகளும் அம்மையாரை நேரில் வந்து சந்திக்க வேண்டிய முறைப்படி சந்தித்த பிறகு, அந்த வரி உயர்வு ரத்தையும் நிதி நிலை அறிக்கையிலே அறிவிக்கக் காத்திருக்காமல், தன்னிச்சையாக இந்த அரசு அறிவித்து விட்டது.
தரிசு நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம் என்று என். வரதராசன் கூறியிருக்கிறாரே?
தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அவருடைய கூட்டணி கட்சியினர்தான் தலைமைக் கழகத்திலே என்னைச் சந்தித்து சிறுதாவூர் கிராமத்தில் தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள் கையகப்படுத்தியிருப்பதாகவும், அதனை மீட்டு மீண்டும் தலித்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
உடனடியாக நான் அதையேற்று நீதிபதி சிவ சுப்ரமணியத்தைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்து, அவரும் ஆய்வு நடத்தி தலித்களிடமிருந்து சிறுதாவூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தார்.
தற்போது என். வரதராசன் தங்கள் தோழமைக் கட்சித் தலைவி, முதல்வர் ஜெயலலிதாவிடம் அந்தக் கோரிக்கையை வைத்து அந்த நிலத்தை மீட்டு தலித்களுக்கு வழங்க முன்வரட்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஊரிலும் உள்ள தரிசு நிலங்களை மீட்க முன்வரலாம்.
சன் தொலைக்காட்சி அலுவலர் சக்சேனா மீது காவல் துறையினர் மீண்டும் மீண்டும் வழக்குகளை பதிவு செய்வதும், ஆனால் அதிலே பலர் தங்கள் புகார் மனுக்களைத் திரும்பப் பெறுவதும் எதைக் காட்டுகிறது?
ஆட்சியினர் எந்த அளவிற்கு பழிவாங்கும் தன்மையோடு வழக்குகளைச் சுமத்துவதிலே அக்கறை காட்டு கிறார்கள் என்பதை தான் காட்டுகின்றது. சக்சேனாவிற்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் டி.எஸ். செல்வராஜ் என்பவரும் சண்முகவேலு என்பவரும் தங்கள் புகார் மனுக்களைத் திரும்பப் பெற்று விட்டார்கள் என்று செய்தி வந்துள்ளது.
2&8&2011 தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியில், ராசு மதுரவன் என்ற தயாரிப்பாளர் சக்சேனாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறையை தான் கேட்க வில்லை என்றும், காவல் துறை அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதற்கு தன்னுடைய அனுமதியைக் கோரவில்லை என்றும் சொல்லி யிருக்கிறார்.
எனவே புகார் மனுதாரர் கேட்காமல், காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதிலிருந்தே, இந்த ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது தானே உண் மையாகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment