கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 6, 2011

தமிழக நிதி நிலை அறிக்கையை கண்ணை மூடிக் கொண்டு படித்து பாராட்டி மகிழலாம் - திமுக தலைவர் கருணாநிதி


தமிழக நிதி நிலையை அறிக்கையை கண்ணை மூடிக் கொண்டு படித்து, பாராட்டி மகிழலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி 05.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா, அரசின் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த நிதி நிலை அறிக்கையில் இரண்டாவது பத்தியிலேயே �மாநில அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்குக் கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது� என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து, மாநில அரசின் கடன் சுமையைக் குறைப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும், யோசனைகளையும் நிதி நிலை அறிக்கையிலே தெரிவிப்பார் என்று எண்ணி அதை முழுவதும் படித்த போது & இறுதியாக இந்த 2011&2012ஆம் ஆண்டுக்கு அரசு பெறப் போகும் கடன் 17,261 கோடி ரூபாய் என்றிருப்பதைக் கண்டு நான் பெரும் ஏமாற்றமடைந்தேன்.
மாநில அரசின் கடன் சுமையைப் பற்றி ஏதோ தி.மு.க ஆட்சியிலே இருந்த போது, கடன்களை வாங்கி அவற்றையெல்லாம் ஜெயலலிதாவின் தலையில் வைத்து விட்டுப் போய் விட்டதைப் போல ஆதங்கப்பட்டு அடிக்கடி சிலர் பேசி வந்த நிலையில் அவர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்களென்று எண்ணுகின்றேன்.
தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.க அரசு ஏற்றி வைத்து விட்டதாகத் திரும்பத் திரும்பச் சொல்வது தவறு.
31&3&2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். இது ஜெயலலிதா, தி.மு.க அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை. அந்தக் கடன் சுமையைக் குறைக்க தி.மு.க அரசு எந்த வரியையும் விதிக்க வில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு & நிதி நிலை அறிக்கையை அவையிலே படிப்பதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக & வரிகளை சுமத்தியிருக்கிறார்.
நிதி நிலை அறிக்கையைப் படிப்பதற்கு முன்பு வரிகளை சுமத்தி விட்டு, தற்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று வாய் நிறைய புகழ்ந்து கொள்வதிலே என்ன பொருள் இருக்க முடியும்? நிதித் துறையின் செயலாளர், சண்முகம், நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு அளிக்கும் வழக்கமான பேட்டியில், கலால் வரிகள் மூலமாக மாநில அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரத்து 191 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என்றும், மதுபானங்கள் மீதான வருவாய் நீங்கலாக விற்பனை வரிகள் மூலம் மாநில அரசுக்கு 7 ஆயிரத்து 755 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், மதுபானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாயையும் சேர்த்தால் 17 ஆயிரத்து 810 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்ட தாக பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டதோடு அந்தத் திட்டங் களையெல்லாம் நிதி நிலை அறிக்கைsயிலே மூன்றாவது பத்தியில் விரிவாக வெளியிட்டுள்ள நிதித் துறை அமைச்சர், அந்த ஏழு திட்டங்களிலே ஒரு திட்டமான மகப்பேறு கால விடுமுறை சலுகை ஆறு மாதங்களாக உயர்த் தப்படும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டது ஏனோ?
தி.மு.க அரசு இலவசத் திட்டங்களை அறிவித்த போதெல்லாம், மக்களை ஏழை களாகவே வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலியும் கிண்டலும் செய்த ஜெயலலிதா தற்போதைய நிதி நிலை அறிக்கையிலே இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்த இலவசத் திட்டங்களைத் தவிர நிதி நிலை அறிக்கையிலே உள்ள மற்ற திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவும், கழக அரசின் திட்டங்களாகவும் உள்ளன.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மென்றால், மத்திய அரசின் திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய தோட்டக் கலை இயக்கம், தேசிய மீன் வளர்ச்சிக் கழக நிதித் திட்டம், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புரப் புனரமைப்புத் திட்டம், ராஜீவ் வீட்டு வசதித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம், சொர்ண ஜெயந்தி வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களும், உலக வங்கித் திட்டங்களான நீர்வள நிலவளத் திட்டம், அணை பாதுகாப்புத் திட்டம், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், ஜப்பான் நாட்டு உதவியுடன் பசுமைத் திட்டம் மற்றும் சென்னை மாநகர வெளிவட்டச் சாலைத் திட்டம் போன்ற திட்டங்களும் & ஜெர்மன் வளர்ச்சி வங்கி மூலம் குடிநீர், மழைநீர், பாதாளச் சாக்கடைத் திட்டம் போன்ற திட்டங்களுமாகும்.
கழக ஆட்சியில் தொடங்கிய பல்வேறு திட்டங்களின் பலனை அ.தி.மு.க. ஆட்சி தற்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
நிதிநிலை அறிக்கையில் பத்தி 6ல் �மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணி யில் உள்ளது� என்றும், பத்தி 50ல் �உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படு கிறது� என்றும், பத்தி 56ல் �நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது� என்றும் கழக அரசுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கழக அரசு தொடங்கிய நதி நீர் இணைப்புத் திட்டம், பொது விநியோகச் சிறப்புத் திட்டம், திறன் வளர்ப்புத் திட்டம் போன்றவையும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தத் திட்டங்களையும் இந்த ஆட்சியிலே தொடர்ந்தாலும் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட நல்ல பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதிலும் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது. சென்னைப் புறநகர் காவல் ஆணையரகத்திற்கு மூடு விழா செய்யப் போவதாக அறிவித்திருப்பது ஒரு உதாரணம்.
மேலும், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியிருக்கிறார்கள். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்து, முதல் ஆண்டில் கட்ட முற்பட்ட 3 லட்சம் கான்கிரீட் வீடுகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் முற்றுப்பெற்றது போக எஞ்சியுள்ள ஒன்றரை இலட்சம் வீடுகளும் இன்று முற்றுப் பெறவேண்டிய நிலையில் காத்திருக்கின்றன.
நிதி நிலை அறிக்கை பத்தி 65ல் �கடந்த ஐந்தாண்டுகளில் கூடியுள்ள புதிய உற்பத்தித் திறன் 206 மெகாவாட் மட்டுமே� என்று கூறிவிட்டு & பத்தி 68ல் 2011&2012ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது� என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த 3,280 மெகாவாட் மின்சாரமும் கடந்த ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தொடங்கப் பட்ட திட்டங்களால் கிடைக்கக் கூடியதே தவிர, அ.தி.மு.க. ஆட்சி இந்த மூன்று மாதங்களிலே உற்பத்தி செய்தது அல்ல.
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட �தொல்காப்பியர் பேரவை� போன்ற தீர்மானங் களை நிறைவேற்றுவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போதைய நிதி நிலை அறிக்கையில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே அ.தி.மு.க. நிதி நிலை அறிக்கையைக் கண்ணை மூடிக் கொண்டு படித்துப் பாராட்டி மகிழலாம், அவ்வளவுதான்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment