கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

பொய் வழக்கு போடவே நேரம் போதவில்லை சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா? - முன்னாள் முதல்வர் கருணாநிதி


அதிமுக ஆட்சியில் போலீசாருக்கு பொய் வழக்கு போடவே நேரம் போதவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்டுள்ள கருணாநிதி கொலை, கொள்ளை சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 02.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள் முடியவில்லை. இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவு நிகழ்ச்சிகளை மட்டும் பொதுமக்களின் சிந்தனைக்குப் பட்டியலிடுகிறேன்.

* மளிகைக்கடையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் பத்து பவுன் தாலி சங்கிலி பறிப்பு; வளசரவாக்கம் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை; தோழிக்கு நகை கொடுத்ததைக் கேட்டு அடித்து உதைத்த போதை தந்தையை கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை செய்தார்.
* கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது. பண்ருட்டியில் நள்ளிரவில் அடகு கடை அதிபர் கொலை
* ^1 கோடி நகை கொள்ளை. நாங்குனேரி அருகில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை.
* கொடுங்கையூர்வியாபாரிகள் சங்கத் தலைவர் மனைவியுடன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியபோது
* ^1லட்சம் தங்கச் சங்கிலி பறிப்பு.
* கோவையில் நகைப் பட்டறையில் ஊழியர்களை கட்டிப் போட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை.
* பீர்க்கன்கரணையில் பயங்கரம் காவலாளி கொலை பணம் கொள்ளை சென்னை போலீசார் என்று கூறி கோவையில்
* ^18லட்சம் தங்க நகைகள் கொள்ளை.
* நீலாங்கரையில் பெண் கொலை; காருடன் கட்டிட காண்ட்ராக்டர் உயிருடன் எரித்துக் கொலை; ஈரோடு அருகே சூரம்பட்டி நகர பா.ம.க. செயலாளர் குத்திக் கொலை.
* ஓடும் பஸ்ஸில் துணிகரம் தூக்கத்தில் இருந்த பயணிகளி டம் 16 லட்சம் நகை, பணம் திருட்டு. பட்டப் பகலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழ.கருப்பையா மனைவியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.
* திருச்சி சமயபுரம் அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை. தக்கலையில் மயக்க மருந்து பயன்படுத்தி பெண்ணிடம் 24 பவுன் சங்கிலி பறிப்பு.
* சென்னை மெரினாவில் சி.பி.ஐ. போலீஸ் ஏட்டு மனைவியிடம் செயின் பறிப்பு. ஆளுநர் மாளிகை பாதுகாப்பு வீரர் மாயம் . ராயப்பேட்டையில் கார் டிரைவர் வெட்டிக் கொலை . விருகம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை. சங்ககிரி அருகே இரண்டு வாலிபர்கள் எரித்துக் கொலை .
* ஓமலூர் அருகே நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் 57 பவுன் நகை, பணம் கொள்ளை. சென்னை பழவந்தாங்கலில் பட்டப் பகலில் பயங்கரம் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை.
* திருவான்மியூரில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 15 சவரன் தங்கச் சங்கிலி வழிப்பறி. மைலாப்பூரில் காண்ட்ராக்டரைக் குத்தி பணம், வாகனத்தைப் பறித்த கும்பல்.
* திருப்பரங்குன்றம் அருகே கல்லூரி மாணவி கொலை .சென்னை ஐஸ் அவுசில் சினிமா கலைஞர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை .புளியந்தோப்பு பூங்காவில் வாலிபர் கொலை
* வாணியம்பாடியில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை. பூந்தமல்லியில் திருமண வீட்டில் சப் இன்ஸ்பெக்டரிடம் நகை,
* ^3லட்சம் கொள்ளை. சேலத்தில் வாலிபர் அடித்துக் கொலை .
* ஆண்டிபட்டி அருகே டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து பெண் படுகாயம். மேல்மருவத்தூர் அருகே அம்மன் கோயிலில் நகைகள், பணம் கொள்ளை.
* ^5 லட்சம் கேட்டு சென்னை மாணவி கர்நாடகத்துக்குக் கடத்தல்
* ^30 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கட்டியுடன் லாரி கடத்தல். இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் கொள்ளை.
* ^5 லட்சம் கேட்டு சென்னை மாணவி கர்நாடகத்துக்குக் கடத்தல்
* ^30 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கட்டியுடன் லாரி கடத்தல். இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் கொள்ளை.
* மைலாப்பூரில் அம்மன் கோவில் கவசங்கள் திருட்டு. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் அட்டூழியம் அரிவாளால் வெட்டி நகை பறிப்பு வாரிய வீடு வாங்கித் தருவதாக து�ர்தர்ஷன் ஊழியர்களிடம் ^31லட்சம் மோசடி.
* பட்டுக்கோட்டையில் டி.வி., கிரைண்டரை அலறவிட்டு, பெண் கழுத்தறுத்து கொலை 6 பவுன், 87 ஆயிரம் கொள்ளை.
* ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை. மணலி, புதுநகரில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்துக் கொலை. ரயில்வே அதிகாரி வீட்டுக் கதவை உடைத்து 2 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோயில்களில் அம்மன் தாலிகள் திருட்டு.
* ஊத்தங்கரை அருகே கோவில் பூட்டை உடைத்து 70 பவுன் நகை கொள்ளை.
* சினிமா ஆர்ட் டைரக்டர் மனைவியை தாக்கிக் கொள்ளை. அரசு அதிகாரி வீட்டில் பட்டப் பகலில் கொள்ளை. சென்னையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடத்தல் ^50 ஆயிரத்திற்கு விற்பனை. சென்னையில் குழந்தையைக் கடத்தி விற்பனை. மூதாட்டியிடம் நகை வழிப்பறி
* கொடுங்கையூரில் ஓட ஓட விரட்டி மூதாட்டி படுகொலை. வேலூரில் பிளஸ் 1 மாணவிகள் 3 பேர் கடத்தல். திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை.
* குன்றத்தூரில் வாலிபர் கழுத்தறுத்து கொலை. ஈரோட்டில் வழிப்பறி கொள்ளை. பத்து நாளில் 35 பவுன் நகை, ^3 லட்சம் இழப்பு. வியாசர்பாடியில் ஒரே இரவில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை.
* கடந்த மாதம் திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் ஒரேநாளில் நடந்த 2 சம்பவங்களில் பெண் காவலர் ஒருவர் நகையை பறி கொடுத்தார்.
* நாங்குநேரி அருகே திருமணமான ஆறு மாதத்தில் கர்ப்பிணி அடித்துக் கொலை. பட்டாபிராமில் வியாபாரி வீட்டில் 35 சவரன் கொள்ளை.
* திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் 220 பவுன் கொள்ளை. கடலூர் மாவட்டத்தில் நகைக் கொள்ளை கும்பல் சங்கிலி பறிப்பு வீடுகளில் கொள்ளை தொடர்கிறது. நாகர்கோவிலில் வாலிபர் கொடூர கொலை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
* திருவொற்றியூரில் பட்டப் பகலில் 50 சவரன் நகை, பணம் கொள்ளை. கடலூர் பா.ம.க. பிரமுகர் வெட்டிக் கொலை.
*மதுரை திருமங்கலம் அருகே தனியார் பள்ளி மாணவன் படுகொலை. ரயிலில் பெண் பயணியிடம்
^4 லட்சம் நகை திருட்டு.
* திருப்பூரில் இளம்பெண் கற்பழித்துக் கொலை. சென்னை விமான நிலையத்தில் 37 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்.

* மீனம்பாக்கத்தில் உதவி ஆய்வாளர் மனைவி யிடம் 10 சவரன் நகை திருட்டு. சென்னை கோட்டூர்புரம் போலீஸ் பூத் அருகே தேமுதிக நிர்வாகி துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
* நாகர்கோவிலில் பட்டதாரி பெண் எரித்துக் கொலை குளியல் அறையில் கருகிக் கிடந்தார். ஆரணி அருகே பரிதாபம் கார் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பேர் பலி. தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி. மதுரையில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியன் கொடூரக் கொலை 6 பேர் கும்பல் வெறிச் செயல்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்து கடந்த இரண்டே மாதங்களில் நடந்த சம்பவங்கள் சில நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்துள்ளவற்றை மட்டும் என் கண்ணிலே தென்பட்டவைகள் இங்கே தொகுத்துள்ளேன்.
காவல் துறையினரைக் கேட்டால், தி.மு. கழகத்தினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை என்பார்கள். சட்டம், ஒழுங்கைப் பற்றி தி.மு. கழக ஆட்சியின் போது குறை கூறிய ஜெயலலிதா, என்ன பதில் சொல்லப்போகிறார்?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment