கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லியிருப்பார் ஜெயலலிதா: சமச்சீர் வழக்கு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்பாளையங்கோட்டையில் 09.08.2011 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின்,

சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பு கலைஞர் ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம் என்றார்.

சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை என்றார்.


பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டிபிஎம் மைதீன்கான்,பூங்கோதை, கீதா ஜுவன், திமுக மாவட்டச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் உள்பட திமுகவினர் உடன் இருந்தனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு தமிழக அரசுக்கு மரண அடி - மு.க.ஸ்டாலின் பேட்டி :

சமச்சீர் கல்வி விகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த மரண அடி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 09.08.2011 அன்று திருச்சி வந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி மற்றும் திருச்சி மாநகர பகுதி செயலாளர் காஜாமலை விஜய் ஆகியோரை சந்தித்து பேசினார்.
பின்னர் சிறைவாசலில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த அடி என கூறலாமா?
மரண அடி என கூறலாம். உச்சநீதிமன்றம் இதுபோல் திமுக ஆட்சியில் தீர்ப்பு வழங்கியிருந்தால், ஜெயலலிதா முதல்வர் கருணாநிதி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருப்பார். ஆனால் தற்போது கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பல இடங்களில் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். பொய் வழக்குகள் தொடர்ந்தால் திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதே. அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதா?
திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தேவை இல்லை. திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயலலிதாவே சிறைகளை நிரப்பி விடுவார்.
சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீது ஒரு பெண் நிலமோசடி புகார் கொடுத்துள்ளாரே?
முதல்வர் ஜெயலலிதா மீது தற்போதும் பல மோசடி புகார்கள் உள்ளன. கூறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருச்சி சிறையில் நிர்வாகிகளை சந்தித்த முகஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

No comments:

Post a Comment