கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பழிவாங்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் - திமுக தலைவர் கருணாநிதி


அதிமுக ஆட்சியில் பழி வாங்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் யார் யார் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 08.08.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில்கள் வருமாறு:
திமுக ஆட்சிக் காலத்தின் போது உண்மையாக தங்கள் சொத்துக்களை விற்றவர்களே, அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது என்றவுடன் திமுகவினர் மீது வீண் புகார் கூறுகிறார்களே?
அதனால்தான் திமுக ஆட்சிக் காலத்தில் பொய்யான புகார்களைக் கூறுவோருக்கு தண்டனை அளிக்க ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது. நேற்றையதினம் கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான நோக்கத்துக்காக, பொது நல மனு தாக்கல் செய்தவர்களுக்கு ஸீ50ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, தன் கடந்த ஆட்சிக் காலங்களில் போலீஸ் அதிகாரிகள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்று ஆங்கில இதழ் ஒன்று கூறியிருக்கிறதே?
அந்த இதழின் நினைவுக்கு சில உதாரணங்கள். 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக ஆன போதே, டி.ஜி.பி.யாக இருந்த, துரை என்ற திறமையான அதிகாரியை பணியிலிருந்து மாற்றியதோடு, விசாரணை என்ற பெயரில் செய்த கொடுமைகளின் காரணமாக அவர் மனம் உடைந்து இந்த உலகத்தைவிட்டே சென்றுவிட்டார். இது உதாரணம் ஒன்று.
2001ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் 2011ல் செய்ததைப் போலவே டி.ஜி.பி.யை மாற்றிவிட்டு, ரவீந்தரநாத்தை டிஜிபியாக நியமித்தார். அவர்தான் நன்றிக் கடனாக நள்ளிரவில் என்னைக் கைது செய்து அம்மையாரைக் குளிர வைத்தார். ஆனால் அந்த அதிகாரி அந்தப் பதவியில் நீண்ட நாள் நீடிக்கவில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த காளிமுத்துவை மாற்றிவிட்டு, முத்துக்கருப்பனை அந்தப் பதவியிலே நியமித்தார். அவரும் என்னைக் கைது செய்வதில் தன் திறமையையெல்லாம் காட்டினார். அவரும் அந்தப் பதவியிலே நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
ஜெயலலிதாவால் சில நாட்களில் அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, அதன் பின்னர் இடைக்காலப் பணி நீக்கமே செய்யப்பட்டார். திரும்பவும் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், அவரது பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவருக்குத் தரப்பட வேண்டிய பதவி உயர்வுகள் தரப்பட்டன
இவைகள் எல்லாம் கடந்த கால உதாரணங்கள், தற்போது அம்மையார் எந்தக் காவல் துறையினரையும் பழி வாங்கவில்லை என்று யாராவது கூறுவார்களேயானால், ஜாபர் சேட் உதாரணம் மட்டுமல்ல துக்கையாண்டி என்று ஒரு அதிகாரி முன்பு, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கினைக் கவனித்து வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்று வரை அவருக்கு எந்தப் பதவியும் ஒதுக்கவில்லை.
இவ்வளவு தூரம் போவானேன்? முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதில், குற்றம் சாற்றப் பெற்றவர்களை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று கூறி, 15 இன்ஸ்பெக்டர்கள், 16 சப் இன்ஸ்பெக்டர்கள், 23 தலைமைக் காவலர்கள் உட்பட 54 பேரை சேலத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 39 போலீசார் இன்றைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரைச் சந்தித்து கண் கலங்கி முறையிட்டிருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எப்படி செல்வது? எங்களது குறைகளைக் கேட்க யாருமே இல்லையா? என்று அழுதிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. அரசின் முதல் நிதி நிலை அறிக்கை குறித்து ஒரேயடியாக புகழ்மாலை சூட்டுவதில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொள்கிறார்களே?
முதல் அமைச்சரின் கருணை அப்படியாவது தங்கள் பக்கம் திரும்பாதா என்று அவர்கள் தவம் கிடக்கிறார்கள். நிதி நிலை அறிக்கை பற்றி நான் ஏற்கனவே விளக்கமாக சொல்லியிருக்கிறேன். மேலும் அதைப் பற்றிக் கூற வேண்டுமேயானால்
காலியாக உள்ள 60 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு அ.தி.மு.க. ஆட்சி பின்பற்றப் போகும் முறை பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லை.
அண்ணா பல்கலைக் கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக் கழகமாக ஆக்கப் போவதாகச் சொன்னார்கள். அது என்னவாயிற்று என்று நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் இரண்டு லட்சம் காலிப் பணி இடங்கள் இருப்பதாக அ.தி.மு.க. வின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி சொல்லி வருகிறது. அவற்றை நிரப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை.
2004 முதல் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கூறிய வாக்குறுதி பற்றி எதுவும் இல்லை. டாஸ்மாக் பணியாளர்களின் நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதாக ஜெ. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை.
இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கியது கழக அரசு. ஆனால் இந்த இட ஒதுக்கீடு கூடவே கூடாது என்ற எதிர்மறைக் கருத்து உடையவர் ஜெயலலிதா. எனவே இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடருமா என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கு உள்ளது.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment