திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருவாரூர் தெற்கு வீதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, கம்பன் எக்ஸ்பிரசில் 06.08.2011 அன்று அதிகாலை திருவாரூர் வந்தார். முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உடன் வந்தனர்.
ரயில் நிலையத்தில் கருணாநிதியை முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எம்பி, நாகை மாவட்ட செயலாளர் விஜயன் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், திருச்சி செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் ராஜா, கோவி.செழியன், திருவாரூர் நகர செயலாளர் சங்கர் உள்பட ஏராளமானோர் வரவேற்றனர்.
ரயில் நிலையத்தில் திரண்டிருந்த மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொழிலாளர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, விவசாய அணி என அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினரைப் பார்த்த கருணாநிதி உற்சாகமாக கையசைத்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கருணாநிதி ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஓய்வெடுத்தார். மாலை 5.20க்கு அங்கிருந்து புறப்பட்டு நகர்மன்ற தலைவரும், தனது நண்பருமான தென்னன் இல்லத்திற்கு சென்று அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார். பின்னர் காட்டூரில் உள்ள தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவு இல்லத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவல த்திற்கு சென்ற அவர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment