கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

ஜெயலலிதா கூட்டணியில் யாருக்கும் கொள்கை இல்லை - திண்டுக்கல் லியோனி


அதிமுக கூட்டணியில் யாருக்கும் எந்த கொள்கையும் இல்லை என பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி பேசினார்.
விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் பொன்முடியை ஆதரித்து பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி, கோலியனூரில் 03.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. மற்றவர்கள் கூட்டணியை எப்படி அமைத்தார்கள் என்று டி.வி.யில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேட்ட தொகுதிகள் கொடுக்கவில்லை என்றதும் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள் வீரவசனம் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குறிப்பிடும்போது சமரச பேச்சுக்கே இடமில்லை என்றார். அப்புறம் சமரசமாகி விட்டார்.
நாகப்பட்டினத்தில் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்துகிறார். எப்படி தெரியுமா... இவர் கூண்டில் ஏறி நிற்கிறார். வயக்காட்டில் வேட்பாளர்கள் நிற்கின்றனர். அந்த அளவுக்கு அங்கே வேட்பாளர்களுக்கு மரியாதை. அதிமுக கூட்டணியை நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை. கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க மக்கள் தயாராகிவிட்டனர். தமிழகத்தில் திமுக ஆதரவு அலை வீசுகிறது.
மகாபாரதத்திலேயே கருத்து கணிப்புகள் தப்பாகிவிட்டது. இன்றைய கருத்து கணிப்புகளை மக்கள் நம்பவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை ஒரு வழி பண்ணிவிடுவோம் என்று கூவுகிறார்கள். அதுக்காகவா அவர்களிடம் ஆட்சியை கொடுப்பது? மக்களுக்கு என்ன செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் விஜயகாந்த் பேசுகிறார். தர்மபுரியில் வேட்பாளரை அடிக்கிறார், காரைக்குடியில் அதிமுக கொடியை பிடுங்கி எறி என்கிறார். ஜெயலலிதா அமைத்துள்ள கூட்டணியில் யாருக்கும் எந்தக் கொள்கையும் இல்லை.
இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment