கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

6&வது முறை முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்பதை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் - பிரசாரத்தில் பாக்யராஜ் பேச்சு


கருணாநிதி 6&வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கும் நாளை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.
தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து பழைய பெருங்களத்தூர், முடிச்சூரில் பாக்யராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி சண்டை போடுவதிலேயே அதிக நேரம் கழித்துவிட்டனர். ஒரு கதை சொல்கிறேன். ஒருவன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது தூண்டிலில் மீன் மாட்டிக்கொண்டது. அந்த வழியே சென்ற பெரியவர் ‘தூண்டிலில் மீன் மாட்டிக் கொண்டது. தூண்டிலை வெளியே எடு’ என கூறினார். மீன் பிடித்தவனோ, ‘நீங்களே அதை வெளியே எடுங்கள்’ என்றான். வெளியே எடுத்த பிறகு, ‘நீங்களே மீனை எடுத்து கூடையில் போடுங்கள்’ என்றான். அப்புறம் ‘முள்ளில் மண் புழுவை வைத்து மீன் பிடிக்க உதவுங்கள்’ என்றான்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் எதிர்க்கட்சியினர் சோம்பேறியாகிவிட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே எடுத்து அதன்முன்பு ‘அ’வை சேர்த்துவிட்டனர். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அதிமுக தேர்தல் அறிக்கையில் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் தருவதாகவும் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கூடுதலாக தருவதாகவும் வேலை வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளனர். அதிமுக ஆட்சியில் அனைத்து உதவி திட்டங்களை நிறுத்தியவர், எப்படி இவற்றை தருவார். பல லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கினார். வேலை நியமன தடை சட்டத்தை கொண்டு வந்தார். அவரால் எப்படி வேலை தர முடியும்?
திமுக ஆட்சியில் புதிய கல்லூரிகள், தொழிற்கல்விகள் தொடங்கப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றியுள்ளார். ஆனால், எல்லாவற்றையும் குற்றம் சொல்கிறார் விஜயகாந்த். மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை வசிக்கும் மக்கள், எப்போது தேர்தல் முடிந்து 6&வது முறையாக கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்பார். கிரைண்டர், மிக்சி எப்போது கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

No comments:

Post a Comment