கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

விஜயகாந்த் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும் - திருமாவளவன்


விஜயகாந்த் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினர்.
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்தார். கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை மதிக்கும், மரியாதையுடன் நடத்தும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்தரப்பில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாத நிலையில் ஒரு கூட்டணியும் உள்ளது.
விஜயகாந்த் கதைஇந்த தேர்தலுடன் முடிந்து விடும். அவரது முதல்வர் கனவும் பலிக்கப் போவதில்லை.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த், தனது கட்சி சின்னம் ‘கொட்டும் முரசு’ என்பதை ‘குட்டும் முரசு’ என்கிறார். அண்டப்புழுகு, ஆகாசப்புழுகு என தினமும் பொய் பேசுகிறார். இதுபோன்ற மக்கள் விரோத கூட்டணி ஜெயிக்க வேண்டுமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர்.
இவ்வாறு திருவாவளவன் பேசினார்.
ஐந்து பெண்களை பெற்றவர்களும் திமுக ஆட்சியில் சுகவாசி ஆகலாம் - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு :

‘’முதல்வர் கருணாநிதி ஆட்சியில், 5 பெண்களை பெற்றவர்களும் சுகவாசி ஆகலாம்’ என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முனியம்மாள் கனியமுதனை ஆதரித்து, மத்தூரில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, காஸ் அடுப்பு, இலவச கலர் டிவி, கர்ப்பிணி உதவி தொகை உள்பட பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் ஆட்சியாக முதல்வர் கருணாநிதியின் ஆட்சி திகழ்கிறது. 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்த போது, ஜெயலலிதா என்ன செய்தார்? இளைஞர்கள் படித்து, நாகரீகத்தை வளர்க்கும் இந்த காலகட்டத்தில் ஆடு, மாடு வழங்குவேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டியாவது அந்த காலம். ஐந்து பெண்களை பெற்றாலும் சுகவாசியாவது முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான். 6வது முறையாக கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டும். எனவே, வரும் தேர்தலில் முனியம்மாள் கனியமுதனுக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ஏழைகளின் துயரை போக்கியவர் கருணாநிதி - தங்கபாலு :
‘ஏழைகளின் துயரை போக்கியவர் கருணாநிதி’ என்று தங்கபாலு பேசினார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, 08.04.2011 அன்று காலை 7 மணிக்கு ராமசாமி சாலையில் இருந்து வாக்கு சேகரித்தார். அவருடன் ஜெயந்தி தங்கபாலு, முனவர் பாட்சா, திமுக பகுதிச் செயலாளர் த.வேலு உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
ஸ்ரீராம் காலனி, பீமண்ணபேட்டை முதல் தெரு, விசாலாட்சி தோட்டத்திற்கு தங்கபாலு வந்தபோது, மேளதாளம் ,வாண வேடிக்கையோடு அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் தங்கபாலு பேசியதாவது:
ஏழை மக்களின் வறுமையை அறிந்து, அவர்களின் வயிற்றுக்கு உணவு அளித்தார். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்து துயரை போக்கினார். கருணாநிதிதான் முதல்வர் என்று நாம் சொல்கிறோம். ஆனால் எதிர் அணியினர் யார் முதல்வர் என்று இதுவரை கூறவில்லை.
அடுத்த முதல்வர் கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சொன்னார். எண்ணற்ற சாதனைகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன. இந்த பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட மாட்டாது என உறுதி அளிக்கிறேன். ஆனால், எதிர் அணியினர் வந்தால் குடிசைகளை அகற்றுவார்கள். எனவே திமுக கூட்டணி வேட்பாளரான என்னை வெற்றி பெறச் செய்ய ‘கை’ சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.

No comments:

Post a Comment