கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளது: மு.க.அழகிரி


தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளது என, மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து விமானம் மூலம் 18.04.2011 அன்று காலை 11.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதில் அளித்தார்.

கேள்வி: தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்?


பதில்:
திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். எனவே, தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைவது உறுதி. இதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.


கேள்வி: திமுக வன்முறையில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

பதில்: இது உண்மைக்கு புறம்பானது. நீங்களே வந்து பாருங்கள். எந்தக் கட்சிக்காரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற வன்முறையில் அதிமுகவினர்தான் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.


கேள்வி: மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்துமாறு புகார் எழுப்பட்டுள்ளதே?


பதில்: தேர்தல் ஆணையத்தின் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்.
தாராளமாக மறு வாக்குப்பதிவு நடத்திக் கொள்ளட்டும். அதை சந்திக்க திமுக கூட்டணி தயாராக உள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்தினாலும் சுறுசுறுப்பாக செயல்படுவோம்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் சொல்வதற்கு எதுவுமில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகவும் பாரபட்சமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment