கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

கொளத்தூர் தொகுதியில் வசிக்கும் பார்வையற்ற மாணவிக்கு பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து


கொளத்தூர் தொகுதியில் வசிக்கும் பார்வையற்ற மாணவிக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின் போது தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் பள்ளியில் உள்ள பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அதுபோலவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு, உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதற்காக சிறுமலர் பள்ளிக்கு சென்றார், மு.க.ஸ்டாலின். அப்போது, அந்த பள்ளியில் படித்து வந்த பார்வையற்ற மாணவி பெனோ, “அமெரிக்காவில் நடக்கும் இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் பங்கேற்க வசதியில்லை. எனவே, உதவிட வேண்டும்” என்று கோரி மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மாணவிக்கு அரசு சார்பில் நிதி உதவி அளித்து, மாநாட்டில் பங்கேற்க வழி செய்தார். அது முதல் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளின் போது அந்த மாணவி வாழ்த்து தெரிவிப்பதும், மாணவியின் பிறந்த நாளின் போது மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்கிறது.
இந்நிலையில், மாணவி பெனோ தனது பிறந்த நாளான 17.04.2011 அன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புவதாக தொலைபேசியில் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். இதற்கு தானே வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கொளத்தூரில் உள்ள அந்த மாணவி வீட்டுக்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பிறந்த நாள் கேக் வெட்டி, அந்த மாணவிக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். பரிசுப் பொருளும் வழங்கினார். இந்த மாணவி, ஸ்டாலினுக்காக கொளத்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment