கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

கருணாநிதி ஆட்சியில்தான் நன்மைகள் நடந்துள்ளன - நடிகை குஷ்பு பேச்சு


முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் அனைத்து நன்மைகளும் நடந்துள்ளன என நடிகை குஷ்பு பேசினார்.
விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து நடிகை குஷ்பு 07.04.2011 அன்று இரவு விழுப்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேலும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவார். ஆசிய கண்டத்தில் 6வது முறையாக யாரும் முதல்வராகவில்லை. நம் முதல்வர் கருணாநிதி, 6வது முறையாக முதல்வராகி சாதனை படைக்க போகிறார்.
திமுக ஆட்சியில்தான் அனைத்து நன்மைகளும் நடந்துள்ளது. பட்டினி கிடையாது. வறுமை கிடையாது. வேலைவாய்ப்பு அதிகம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். 9 கிரகங்கள் இருக்கும். 12 மற்றும் 9ஐ பெருக்கினால் 108. 108 என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வரும். முதல்வர் கருணாநிதி கொடுத்த 108 ஆம்புலன்ஸ்தான். ஏப்ரல் 13ம் தேதி ஓட்டு போடுங்கள். மே 13ம் தேதி கருணாநிதி வெற்றி பெறுகிறார்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பீஷ்மராக செயல்படுகிறார் கருணாநிதி - நடிகர் சிரஞ்சீவி :

ஆவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.தாமோதரனை ஆதரித்து, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு மொழியில் பேசி, ஆவடி புதிய ராணுவ சாலையில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
நான் தமிழகத்தில் பிறக்காவிட்டாலும், கலைத்துறையில் நடிகராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்தேன். பாசத்துடன் தமிழக மக்கள் என்னை வளர்த்ததால் ‘மெகா ஸ்டாராக’ ஆகிவிட்டேன். அதற்காக நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். அவர் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார். தமிழகத்தின் முன்னேற்றத்தில் சோனியாகாந்தி தலைமையிலான மத்திய அரசின் பங்கும் உள்ளது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் மென்பொருள் வளர்ச்சி, புதிய தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பீஷ்மரைப் போல் முதல்வர் கருணாநிதி, தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். தமிழக மக்கள் தெளிவான முடிவு எடுப்பவர்கள். நீங்கள் எடுக்கப்போகும் முடிவில் தமிழகம் உயர்ந்து நிற்கும். எனவே, திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு நடிகர் சிரஞ்சீவி பேசினார்.
மத்திய அரசுடன் ஜெயலலிதா இணக்கமாக நடந்தது இல்லை - நடிகர் பாக்யராஜ் பேச்சு :

மத்திய அரசுடன் ஜெயலலிதா இணக்கமாக நடந்து கொண்டதே இல்லை என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.
கரூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் சர்ச் கார்னர், வெங்கமேடு, அரசுகாலனி ஆகிய இடங்களில் 08.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது, பாக்யராஜ் பேசியதாவது:
அதிமுகவை பொறுத்தளவில் கூட்டணி அமைப்பதற்குள்ளாகவே பெரும் பிரச்னை நடந்தது. திமுக கூட்டணியை கருணாநிதி தெளிவாக அமைத்திருக்கிறார். அனைத்து கட்சி தலைவர்களை மதிப்பவர் அவர்தான். ஜெயலலிதா இதுவரை மத்திய அரசுடன் இணக்கமாக நடந்ததே கிடையாது. முன்னாள் பிரதமர்களான நரசிம்மராவை தலைமுறை இடைவெளி என்றார். வாஜ்பாயை செயல்படாதவர், அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார். கவர்னராக இருந்த சென்னாரெட்டி தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசுடன் சண்டை போடுவதே அவருக்கு வேலை.
காவிரி பிரச்னையில் மோதல் போக்கினை கடைபிடித்ததால், நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரும் கிடைக்காமல் போய் விட்டது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்க போகிறது. எனவே திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசுகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு ஏராளமான திட்டங்கள் கிடைக்கும்.
ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை கூட 108 ஆம்புலன்ஸ்தான் மீட்டு சிகிச்சை அளித்தது. திமுக அரசின் திட்டங்கள் பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை சட்டம் வழங்கியது கருணா நிதிதான். மீண்டும் அவர் ஆட்சிக்கு வருவது உறுதி.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
கருணாநிதி தலைமையில் 5 ஆண்டு சிறப்பான ஆட்சி - நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு :

‘முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் 5 ஆண்டு சிறப்பான ஆட்சி நடந்துள்ளது’ என்று நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார்.
விழுப்புரம் அருகே தோகைபாடி, பெரும்பாக்கம் கிராமத்தில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தாய்மார்களுக்கு செய்ய வேண்டிய அத்தனை நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்ய போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் 5 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி நடந்தது. ஐந்து ஆண்டுகள் ஜெயலலிதா எங்கு போனார் என்று தெரியவில்லை. 5 ஆண்டுகால ஆட்சியில் சொன்னதையும் செய்துள்ளார். ஜெயலலிதாவின் கர்வம், ஆணவம் மறையவில்லை. நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராமல் கருணாநிதி உழைக்கிறார்.
இவ்வாறு நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார்.


No comments:

Post a Comment