கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தேர்தலில் வெற்றி பெற்றதும் எனது முதல் கையெழுத்து ஏழைகளின் நலிவை போக்கும் - கலைஞர் பேட்டி


“தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி பெற்றதும், எனது முதல் கையெழுத்து ஏழைகளின் நலிவைப் போக்குவதாக இருக்கும்” என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 12.04.2011 அன்று வெளியிட்ட கேள்வி & பதில் அறிக்கை வருமாறு:
நீங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து சென்னை திரும்பியிருக்கிறீர்கள். நீங்கள் பல்வேறு தேர்தல்களை சந்தித்திருப்பீர்கள். இந்த தேர்தலில் மக்கள் எழுச்சி எப்படி இருந்தது?
இந்த தேர்தலில் ஏற்கனவே அறிவித்தபடி திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒரு நல்ல சிறப்பான கூட்டணியை அமைத்து தேர்தல் பிரசாரத்திலே, தேர்தல் பணிகளிலே ஈடுபட்டது உங்களுக்கு தெரியும்.
நான் பார்த்தவரையில் இந்த கூட்டணிக் கட்சிகள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, மக்களிடத்திலே எதிர்கால அரசியல் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துச் சொன்னதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் வெற்றியை தருவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இரு தரப்பிலும் இருந்தது. ஆனால் மக்கள் நம்பகத்தகுந்த கட்சிக்குத்தான் வாக்களிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உங்களை சந்தித்து பேசியிருப்பார்கள். அவர்களின் உணர்வு எப்படி இருந்தது?
அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டாலும்கூட அது அறநெறி, அன்புவழியில் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். எங்களை பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக என்னை பொறுத்தவரையில், திமுக சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ஆனாலும், கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ஆனாலும், எல்லா கூட்டங்களிலும் யாரையும் தனிப்பட்ட முறையிலே தரக்குறைவாக பேசுவதில்லை. தாக்கிப் பேசவும் இல்லை. சாதனைகளை மட்டும் எடுத்துச் சொல்லி யார் சாதனைகளை செய்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்டிருக்கிறேன்.
நீங்கள் ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக வருவீர்கள் என்று பொதுவான கருத்து நிலவுகிறதே, அதேபோல, கடந்த முறை நீங்கள் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்றபோது உங்களின் முதல் கையெழுத்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. அதைப்போல மீண்டும் ஆறாவது முறையாக நீங்கள் பதவியேற்கும் போது நீங்கள்போடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?
அது எந்த கையெழுத்தாக இருந்தாலும், அந்த கையெழுத்து ஏழை, எளிய பாட்டாளி மக்கள் நலிவைப் போக்குகின்ற கையெழுத்தாகத்தான் இருக்கும்.
நீங்கள் உங்களுடைய சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறீர்கள். சொந்த ஊரில், மண்ணின் மைந்தராக நீங்கள் போட்டியிடும் போது உங்கள் எண்ணங்கள் உணர்வுகள் எப்படி உள்ளது?
நீண்ட காலத்துக்கு முன்பே நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகுதி தனித் தொகுதியாக இருந்தது. வேண்டுமென்றே தனித் தொகுதியாக அப்போது இருந்தவர்கள் ஆக்கி வைத்திருந்தார்கள். எனவே, நான் போட்டியிட முடியவில்லை. இப்பொழுது பொதுத் தொகுதி என்று அறிவிக்கப்பட்டவுடனே நான் திருவாரூர் தொகுதியிலே போட்டியிடுகிறேன்.
இந்த தேர்தல் தமிழகத்திலே மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் இரண்டு தரப்பினரும் பல்வேறு வாக்குறுதிகளை தந்திருக்கிறீர்கள். தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதியாக, தமிழகத்தின் சொந்த மண்ணின் மைந்தனாக வாக்காளர்கள் இந்த தேர்தலை எப்படி அணுக வேண்டுமென்று ஒரு வாக்காளர் என்ற முறையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?
வாக்காளர் என்ற முறையில் நாம் அளிக்கின்ற வாக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படுமா? அவர்களுக்கு நன்மைகளை பெருக்குமா? நலன்களை சேர்க்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படுகின்ற பதில் நமக்கு திருப்திகரமாக இருக்குமானால், இதை உருவாக்குவதற்கு, நடைமுறைப்படுத்துவதற்கு எந்தக் கட்சியால் முடியும்.
வீட்டுக்கு ஒரு வேலைக்காரரை தேர்ந்தெடுக்கும்போது அதற்கு முன்னே எங்கேயாவது அவர் வேலை செய்திருக்கிறாரா? நல்ல முறையிலே அவர் வேலை செய்திருக்கிறாரா? என்பதையெல்லாம் பார்த்து, தெரிந்து வேலைக்கு சேர்த்துக் கொள்வோம்.
ஆனால் நம்பிக்கைக்குரியவர்கள், நம்பகத்தன்மை உள்ளவர்கள் யார் என்பதை ஒரு வாக்காளன் எண்ணிப் பார்ப்பதுதான் அவனால் ஒரு நல்ல முடிவு எடுக்க உதவும். யாரை வேண்டுமானாலும் கேட்டவர்களுக்கெல்லாம் வாக்களித்து விட்டால் வீட்டுக்கும் பயன்படாது; நாட்டுக்கும் பயன்படாது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல இடங்களில் உருக்கமாக பேசியிருக்கிறீர்கள். அதிலும் உண்மைகளை பேசியிருக்கிறீர்கள். மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
அமோகமான வெற்றி வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment