திருச்செங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து நடிகை குஷ்பு 01.04.2011 அன்று பிரசாரம் செய்தார். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:
உங்கள் ஊர் அர்த்தநாரீஸ்வரர் தனது மனைவிக்கு உடலில் பாதியை கொடுத்துள்ளார். ஆனால் முதல்வர் கருணாநிதி, தமிழ் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துள்ளார். 12 வயதில் இருந்து இன்று வரை மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களின் நலனுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அவர் 6&வது முறையாக முதல்வரானால் இன்னும் அதிகமாக மக்களுக்கு நல்லது செய்வார். பெண்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் திருமணத்துக்காக ரூ.25 ஆயிரம் திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு வாரம் 5 முட்டை வழங்குகிறார். படித்த இளைஞர்கள் இதுவரை 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவார். உங்கள் ஊர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தேர் கொடுத்துள்ளார். திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதா, எந்த நம்பிக்கையில் வாக்குறுதிகளை தருகிறார் என்று தெரியவில்லை. மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார். ஆனால் மக்கள் புத்திசாலிகள். யார் நல்லது செய்வார்கள் என்று அவர்களுக்கு தெரியும். ஜெயலலிதாவை நம்பி ஓட்டு போட்டு விடாதீர்கள். எதையும் செய்யவும் மாட்டார். இருக்கிற திட்டங்களையும் ரத்து செய்து விடுவார். பிறகு கொடநாடு போய் தூங்கி விடுவார். நீங்க நல்லா இருக்க, உங்க குடும்பம் நல்லா இருக்க திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
இதைத்தொடர்ந்து குமாரமங்கலத்திலும் வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவருடன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் காந்திச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் சென்றனர்.
இதைத்தொடர்ந்து குமாரமங்கலத்திலும் வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவருடன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் காந்திச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் சென்றனர்.
No comments:
Post a Comment