‘நடத்தை சரியில்லாததால், விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது’ என நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
கரூரில் 01.04.2011 அன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக எழுச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாய்மார்கள் கருணாநிதி 6வது முறை முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர். அண்ணா முதன் முறை ஆட்சிக்கு வந்தபோதும், 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோதும் இருந்த ஒரு அலை தற்போது தென்படுகிறது. காரணம் கடந்த 5 ஆண்டுளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், கலைஞர் கான்கிரீட் வீடு திட்டம் என பல திட்டங்களை முதல்வர் வழங்கினார். மக்களுடன் கூட்டணி, கடவுளுடன் கூட்டணி என கூறிவிட்டு, திட்டியவர்களுடனே விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ளார். குடித்துவிட்டு வருவதாக கூறியவரும், ஊற்றி கொடுத்தாரா? எனக் கேட்டவரும் கூட்டணி.
விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. நடத்தை சரியில்லாவிட்டால் அரசியலில் வெற்றி பெற முடியாது. திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது.
இவ்வாறு நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
இவ்வாறு நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
No comments:
Post a Comment