புவனகிரி தொகுதி பாமக வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து புவனகிரி பாலம் அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நெப்போலியன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சமத்துவபுரம், உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெண்களுக்கான திருமண நிதியுதவி, கர்ப்பிணி உதவித்தொகை, விதவை உதவித்தொகை. முதியோர் உதவித்தொகை, இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் சீருடை, இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு, சத்துணவில் வாரம் 5 முட்டை, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச 108 ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்துள்ளார். இதில் ஏதாவது ஒன்றையாவது ஜெயலலிதா தனது ஆட்சியில் கொண்டு வந்தாரா?5 ஆண்டு காலத்தில் மக்களை சந்திக்காத ஜெயலலிதா, இப்போது மலையை விட்டு இறங்கி வந்துள்ளார். அக்கா ஜெயலலிதாவும், அண்ணன் விஜயகாந்தும் கூட்டணி அமைத்துள்ளனர். 41 தொகுதிகளை இவராகவே அறிவிக்கிறார். வேறு வழியில்லாமல் அவரும் கையெழுத்து போடுகிறார். இரண்டு பேரும் கலந்து பேசி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை. தொகுதி உடன்பாட்டின்போதே 2 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசாதவர்கள், நாளை நாட்டு மக்களுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியை அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு நெப்போலியன் பேசினார்.
ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: நெப்போலியன்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பண்ருட்டி, பட்டாம்பாக்கம், நெல்லிகுப்பம், அண்ணா கிராமம் ஆகிய பகுதிகளில் மத்திய இணை அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கலைஞர் மக்கள் நல திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யாமல் அகங்காரமாக இருந்தார். அவரது ஆட்சியை சினிமா பிளாஷ்பேக் போல நினைத்துப் பாருங்கள். ஓய்வெடுக்க அடிக்கடி கோடநாடு போய்விடுவார். அதையே தொழிலாக கொண்ட ஜெயலலிதாவுக்கு கட்சி தேர்தல் அறிக்கைகூட ஒழுங்காக தயாரிக்க முடியவில்லை. இவர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்.
குடித்துவிட்டு சட்டசபைக்கு வருபவர் விஜயகாந்த் என்று சொன்னவர் ஜெயலலிதா. அவரோ இவர் ஊற்றிக் கொடுத்தாரா என்று கேட்டார். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள். விருத்தாசலத்தில் தோற்றுவிடுவோம் என்று பயந்து ரிஷிவந்தியத்துக்கு போயிருக்கிறார் விஜயகாந்த். இத்தேர்தலில் ஜெயலலிதா, விஜயகாந்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு நெப்போலியன் பேசினார்.
No comments:
Post a Comment