ஆடு, மாடு தருகிறேன் என்று கூறி, மீண்டும் குழந்தை தொழிலாளர்களை உருவாக்க நினைக்கிறார் ஜெயலலிதா என்று, திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு பேசினார்.
திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நடிகர் வடிவேலு தேரடி திடலில் 02.04.2011 அன்று பிரசாரம் செய்தார்.
அப்போது வடிவேலு பேசியதாவது:
சுனாமியை பின்னுக்கு தள்ளிய மகத்தான சக்தி படைத்த ஊர் திருச்செந்தூர். அந்த ஊரில் திமுகவுக்காக பிரசாரம் செய்வதில் நான் பெருமையடைகிறேன். நான் ஏழை குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழைகளின் வலி என்ன என்பது எனக்கு தெரியும். நான் செல்லுமிடமெல்லாம் எழுச்சி தெரிகிறது. முதல்வர் கருணாநிதி முதியோர் உதவித்தொகையை தந்ததால் பலர் தற்கொலை எண்ணத்தை மாற்றியுள்ளனர்.
ஏழைகள் இல்லாத சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார் கருணாநிதி. வயதான பெரியோருக்கு மகனை போலவும், ஏழை பெண்களுக்கு தகப்பனை போலவும் இருந்து உதவிகள் செய்து வருகிறார். இலவச உயர்கல்வியை வழங்கியதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைந்துள்ளனர்.
தமிழகத்தை மலேசியா, சிங்கப்பூருக்கு இணையாக உயர்த்தி வருகிறார். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், மண்ணெண்ணெய் வழங்கியுள்ளார். நான் எம்ஜிஆருடைய ரசிகன். நேற்று கட்சி ஆரம்பித்து விட்டு இன்று முதல்வராக வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மேலும், அவர் தன்னை கறுப்பு எம்ஜிஆர் என்று வேறு கூறிக்கொள்கிறார். எல்லோரும் கட்சி ஆரம்பித்தால் இந்த நாடு தாங்குமா? ஓட்டுரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ், கர்ப்பிணிகளுக்கும், தமிழக மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். மேடைகளில் குடிபோதையில் பேசுவதும், தனது கட்சி வேட்பாளரை அடிப்பதும், கூட்டணி கட்சியினரை மதிக்காமல் பேசுவதும் ஒரு தலைவருக்கு அழகா?
குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தவர் கருணாநிதி. ஆனால் ஆடு, மாடு தருகிறேன் என்று மீண்டும் குழந்தை தொழிலாளர்களை ஜெயலலிதா உருவாக்க நினைக்கிறார். தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதியை முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
பாட்டு பாடி அசத்தல் :
கறுப்பு எம்.ஜி.ஆருக்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அன்று பாடிய பாட்டு என்று கூறி பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாட்டு:
மானை போல் மானம் என்றாய்
நடையில் மதயானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்
அறிவில் உயர்வாய் சொல்லி கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்.
இந்த பாடல் ஒளிவிளக்கு படத்தில் டி.எம். சவுந்தர்ராஜன் பாடியது. இதில் எம்ஜிஆர் குடிப்பது போல் நடித்திருப்பார் என்று வடிவேலு கூறினார்.
No comments:
Post a Comment