ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுப்பவர் கருணாநிதி. அவற்றை தட்டி பறிப்பவர் ஜெயலலிதா என நடிகர் குமரிமுத்து பேசி னார்.
காரைக்குடி அருகே கானாடுகாத்தான், கூட்டுக்கொல்லை, வ.சூரக்குடி, மணச்சை உட்பட பல்வேறு பகுதிகளில் திருப்புத்து£ர் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனை ஆதரித்து நடிகர் குமரி முத்து பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்காக முதல்வர் கருணாநிதி ஏராள மான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கடந்த தேர்தல் அறிக்கையில் கருணாநிதி அறிவித்த இலவச டிவி, காஸ் அடுப்பு, திருமண உதவித்திட்டம், ரூ.1க்கு அரிசி என அனைத்து திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தினார். இத்தேர்தலில் கிரைண்டர் அல்லது மிக்சி, இலவசமாக 35 கிலோ அரிசி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
மீண்டும் 6வது முறையாக முதல்வராக பதவியேற்றவுடன், இத்திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றி தருவார். கருணாநிதி ஆட் சியில் இருந்தபோது பெண் களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறைவேற்றினார். அடுத்து முதல்வராக பொறுப் பேற்ற ஜெயலலிதா அத்திட்டத்தை நிறுத்தி னார்.
மக்கள் நலனுக்காக பல திட்டங்களை கருணாநிதி கொண்டு வருவார். அதனை நிறுத்துவதில் குறியாக இருப்பவர் ஜெயலலிதா. பொய் யான வாக்குறுதிகளை தரும் ஜெயலலிதாவை நம்பாதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் முத்துராமலிங்கம். காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் துரைசிங்கம், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பள்ளத்து£ர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கொத்தமங்கலம் சேது, காங்கிரஸ் நிர்வாகி மணச்சை கருப்பையா கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment