‘முதல்வர் கருணாநிதியை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை’ என்று நடிகை குஷ்பு கூறினார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, கரூர் பஸ் நிலைய ரவுண்டானா அருகே நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
கூட்டணி வலுவாக இருந்தால் தான் மத்திய, மாநில திட்டங்கள் 100 சதவீதம் மக்களை சென்றடையும். திமுக தலைவர் கருணாநிதியை எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அனுதாப ஓட்டு பெற முயற்சிப்பதாக அநாகரீகமாக பேசி வருகிறார். ஜெயலலிதாவிடம் நான் கேட்கிறேன். முதல்வர் கருணாநிதி மீது ஏதாவது வழக்கு இருக்கிறதா. கோர்ட் படியேறி இருக்கிறாரா.
வயது வித்தியாசம் பார்க்காமல் பேசக்கூடாது. கான்கிரீட் வீடு கட்டித் தந்ததற்காகவா இந்த பெயர். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தற்காகவா இந்த பெயர். 108 ஆம்புலன்ஸ் வழங்கியதற்காகவா இந்த பெயர், உங்களுக்கு தான் வாய்தா ராணி என்ற பெயர் இருக்கிறது. முதல்வரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.
பொதுமக்களாகிய நீங்கள் எப்படி அவருக்கு பதில் தரப்போகிறீர்கள். அதற்கான நாள் ஏப்ரல் 13.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், காந்திகிராமம் ஆகிய பகுதி களிலும் குஷ்பு ஆதரவு திரட்டினார்.
No comments:
Post a Comment