கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மேலும் பல சலுகை அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால், கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களில் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி, தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த மானிய விலையில் உயர்ரக தென்னங்கன்று வழங்கப்படும் என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்
கோவை சிவானந்தா காலனியில் 30.03.2011 அன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது:
இங்கு கூடியிருக்கும் மிகப்பெரிய கூட்டத்தையும் ஏராளமான மக்களையும் கூட்டணி வெற்றிக்காக அரும்பாடுபட்டு கொண்டிருக்கும் தொண்டர்களையும் பார்க்கும் போது திமுக கூட்டணி வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு விடை கிடைத்தாகி விட்டது. வெற்றி பெற்றாகத்தான் வேண்டும். ஏனெனில் கூட்டணி அமைந்திருக்கும் முறையை பார்த்தால் உங்களுக்கு தெளிவு பிறக்கும். நம்பிக்கை பிறக்கும். திமுக கூட்டணியின் வெற்றியை பல்வேறு இயக்க தலைவர்கள் மட்டுமல்ல கொங்கு சீமையில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் பெற முடியாத வெற்றியை இந்த முறை பெறுவதற்கு ஈஸ்வரன் தயவு நமக்கு நிச்சயமாக உள்ளது. நமது கூட்டணியில் கொங்கு முன்னேற்ற கழகமும் பிரதான இடம் பிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஆலோசிக்கும் போது கொங்கு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட்ராமசாமியை சந்தித்தேன். அவர் இந்த கூட்டணி உறுதியான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித் தார். அந்த வெற்றிக்கான நம்பிக்கையை இன்று காலை முதல் நான் பார்க்கும் மலர்ந்த முகங்கள் எல்லாம் சான்று கூறி வருகின்றன.
கோவைக்கு அரசியலுக் காக நான் வந்து புகுந்த இட மல்ல. என் வாழ்க்கையில் ஒர் அங்கமாக கோவை திக ழ்ந்த இடம். நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் திருக்குவளையில்.படித்தது 10 கல் தொலைவிலுள்ள திருவாரூரில். படித்தது மட்டுமன்று பகுத்தறிவை வளர் த்து கொண்டது அறிஞர் அண்ணா, தலைவர் பெரியார் ஆகியோரை சந்தித்தது எல்லாம் அங்குதான். நான் அரசியலுக்கு வந்து 75 ஆண்டுகளாகிறது. தற் போது 87வயதில் உங்களை சந்திக்க வந்துள்ளேன். கோவையை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியான, சோகமான பல நிகழ்ச்சிகள் என்னை தாக்குவதுண்டு.அறிஞர் அண்ணா திமுக வை துவங்கிய போது அவருடன் இருந்த பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, சாதிக்பாட்சா, எஸ்.ஏ.ராஜமாணிக்கம், உடுமலை நாராயணன், சி.டி.தண்டபாணி ஆகியோர் அன்று இருந்தார்கள் இன்று இல்லை.
கொங்கு இனமக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மு.கண்ணப்பனோடு வந்து வாதாடி போராடிய கோவை செழியன் அன்று இருந்தார். இன்று இல்லை. சாமிநாதன், காட்டூர் கோபால், மேட்டுப்பாளையம் தூயவன், விஜயலட்சுமி பழனிச்சாமி, பல்லடம் பொன்னுசாமி, திருப்பூர் முத்துலிங்கம், என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீ ராமுலு நாயுடு ஆகியோர் இன்றைக்கு இல்லை. அவர்கள் எல்லாம் இன் றைக்கு இல்லை என்றாலும் என்னோடு இருந்து எனக்கு ஊட்டிய உணர்வுகள் நெஞ்சில் அகலாமல் இருக்கிறது. கோவை திராவிட கழகத் தின் கோட்டை, கொள்கை வீரர்களின் கோட்டை, என்னை தாலாட்டிய தொட்டில், நான் துள்ளி விளையாடிய தாழ்வாரம் என்ற உணர்வோடு நான் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
1945ம் ஆண்டு நானும் எனது 40 ஆண்டு கால நண்பருமாகிய எம்ஜிஆரும் கோவையில் ஒரே வீட்டில் குடியிருந்தோம். பிளேக் எனும் தொற்றுநோயில் இருந்து எங்களை பாது காத்து கொள்ள,அக்கம்பக்கத்தினரை பாது காக்க, மக்களை காப்பாற்ற சிங்காநல்லூர், ராமநாதபுரம் என்ஜிஆர் வீட்டில் சில காலம் தங்கியிருந்தோம். இது பழங்கதை அல்ல. நமக்குள்ள சொந்தம் 40 ஆண்டுகால இணைப்பு என நான் நினைக்கின்ற போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அமர்ந்திருக்கும் மேடையில் திமுக நண்பர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நண்பர்கள் என பலர் உள்ளனர் முன்பெல்லாம் இந்த மேடையில் ஒருவர், இருவர் அதிகமானால் 3 பேச்சாளர்கள் அமர்ந்திருப்பர். ஆனால் இன்று சொற்பொழிவாளர்கள் அதிகம் பேர் மேடையில் அமர்ந்திருந்த போதும் பேசுவதற்கு உரிய நேரம் இல்லை. அந்தளவிற்கு சொற்பொழிவாளர்கள் அதிகரித்துள்ளனர். இதற்கு காரணம் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது, வளர்ந்து கொண்டிருக்கிறது, வளர்ந்து கொண்டே இருக்கும்
இங்கு என்.ஜி. ராமசாமி இல்லத்தில் தங்கி பழகியதை எண்ணி பார்க்கிறேன். கோவைக்கு வரும் போது எல்லாம் எண்ணி பார்க்கிறேன். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெருவாரியான வெற்றியை பெற்று காலடியில் வைப்போம் என்று தெரிவித்தனர். இதனால் ஆணவ மனப்பான்மை ஏற்படும். எனவே வெற்றியை காலடியில் வைக்க வேண்டாம். கழுத்தில் போடுங்கள். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அப்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
செம்மொழி மாநாட்டில் தமிழ் தாய் வாழ்த்தை தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாட விடவில்லை. இதற்கு முன் தஞ்சையில் நடந்த தமிழ் மாநாட்டின் போது அம்மையார் முதல்வராக இருந்தார். நான் அவரை அம்மையார் என்று தான் அழைப்பேன். அவர் வேண்டுமானால் என்னை கருணாநிதி என்று குறிப்பிடட்டும். சிலர் கூட என்னிடம் இதுகுறித்து கேட்டார்கள். அந்த அம்மையார் உங்கள் பெயரை சொல்லி அழைக்கின்றாரே? என்றனர். எனது அப்பா, அம்மா வைத்த பெயரை தானே கூப்பிடுகிறார். சிலர் வேண்டுமானால் பெயரை மாற்றி கொள்வார்கள். ஆனால் நான் எனது பெயரை மாற்றி கொள்ள மாட்டேன்.
பெரியார் கொள்கைக்கு, அண்ணாவின் இலட்சியத்திற்கு எதிராக இருந்தால் மாற்றி கொண்டிருப்பேன். இது பொதுவான பெயர். அனைத்து கடவுள்களுக்கும் உள்ள பெயர். கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து கடவுள்களில் கருணை உள்ள கடவுள்களுக்கு உள்ள பெயர். விளம்பரத்திற்காக நான் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதாக கூறினார்கள். சொல்லி விட்டுபோகட்டும்.
தமிழ் தாய் வாழ்த்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று தான் தெரிவித்தேன். ஆனால்,
‘அவ்வையும், ஆண்டாள் அம்மையாரும் அழகுற பாடி தமிழ் வளர்த்தனர், அன்னை ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தமிழ் வளர்க்கிறார்’ என தமிழ் தாயை அந்த அம்மையார் தனக்கு இணையாக்கி பேசினார். நான் தமிழ் தாயின் மகன். சுய விளம்பரம் தேடுபவர் அல்ல நாம். கழக ஆட்சியில் தான் தீரன் சின்னமலைக்கு சிலை வைக்கப்பட்டது. பெஸ்ட் ராமசாமி உள்ளிட்டோர் பொன்னர்& சங்கர் படத்தை பார்த்தனர். தீரன் சின்னமலை படத்தையும் உருவாக்க வேண்டும். அதனை நாங்கள் பார்க்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தனர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எவ்வாறு தீரன் சின்னமலை விரட்டியடித்தார் என்ற வீர சாகங்களை எழுதி வைத்துள்ளேன்.
பொன்னர்&சங்கர் படம் வெளி வந்த பின் விரைவில் தீரன் சின்னமலை படமும் வரும். படங்கள் மூலம் கிடைத்த தொகையை நலிந்த, ஏழை&எளிய மக்களுக்கு காசோலை, டிராப்ட் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னர்&சங்கர் பட தயாரிப்பாளர்கள் தந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தீரன் சின்னமலை படம் மூலம் கிடைக்கும் தொகையை கோவை வாழ் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவேன்.
தேர்தல் அறிக்கையில் மேலும் சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இங்குள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவே ஆகிவிட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனால் தான் ஒரு கோரிக்கை நிறைவேற்றிய பின் மற்றொரு கோரிக்கையை என கோரிக்கையை வைத்து கொண்டே செல்வார்கள். அதுபோல் மேடையில் பேசியவர்கள், மேடையில் இருப் போர் பல்வேறு கோரிக் கையை முன் வைத்துள்ளார்கள். இவற்றை பரிசீலித்து ஆவண செய்யப்படும் என்று உறுதியளிக் கிறேன்.
கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மீண்டும் கழக ஆட்சி அமையும் பட்சத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும். தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க உயர் ரக கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த னர். அது, வழங்கப்படும். திருப்பூர் சாய கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நீதி மன்ற நடவடிக்கையால் தாமதப்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எனது கனவிலும், நனவிலும் துன்புறுத்தும் திருப்பூர் சாய கழிவு பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பேசி, மத்திய&மாநில அமைச்சர்களுடன் ஒன்று கூடி பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்கள் மூலமாக கடன் வாங்கி வீடு கட்டிய பலர் அசலையும் கட்டமுடியாமல், வட்டியும் அதிகரித்து அவதிப்படுகின்றனர் என்ற தகவல் தரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் ஏற்று கடந்த காலத்தில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களில் வாங்கப்பட்ட கடனுக்கான வட்டி அறவே தள்ளுபடி செய்யப்படும்.
சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான ஊக்கத்தொகை மாநில அரசு மூலம் பரிசீலித்து செய்து கொடுக்கப்படும்.
இங்கே பேசிய காங்கிரஸ் பெரியவர் ஒருவர், என்னை வாழ்த்தி விட்டு எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்தீர்கள். அதேபோல் மின்சார பற்றாக்குறையையும் தீர்த்துக்கொடுக்கவேண்டும் என்று கூறினார். அவருக்கு சொல்வது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் நான் சொல்லி கொள்ள விரும்புவது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி மற்ற மாநிலங்களுக்கு நாம் வினியோகம் செய்யும் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை ஏற்பட்டு வரும் சிரமங்களை நாம் பொறுத்துக்கொள்ளவேண்டும்.
எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டும் போது தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். உணவு தேவை, மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய மின்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் தான் புதிய திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
தற்போது இரண்டு தேர்தல் அறிக்கைகள் வந்துள்ளது. அதில் ஒரு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நம்பும்படியாக இல்லை. கருணாநிதி கொடுத்த தேர்தல் அறிக்கை தான் நம்பும்படியாக உள்ளது. கடந்த காலத்தில் நாம் சொன்னவற்றை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம் என்பதால் நம்பலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் நடைபாதை வாசிகள் நடமாடமுடியாத நிலை இருந்தது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் நள்ளிரவில் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். இது தான் கடந்த ஆட்சியில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த என்னையே நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்து அடித்து கொடுமைப்படுத்தினார். இது தான் அம்மையார் ஆட்சியின் சிறப்பு அம்சம்.
அந்தப்பழம் வேண்டுமா, இந்த பழம் தேவையா என்பதை எண்ணிப்பாருங்கள். அரசாங்க அதிகாரிகளை ஊழியர்களை, எப்படி சவுக்கடி கொடுத்து வேலை வாங்குகிறேன் பாருங்கள் என்று பெண் ஹிட்லராக ஆட்சி செய்ததை எண்ணி பாருங்கள்.
இந்த அம்மையார் ஊழலை பற்றி பேசுகிறார். அம்மையார் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில் புள்ளியில்லை, கமா இல்லை, கடைசியில் மொழி பெயர்ப்பு சரியில்லை என்றெல்லாம் கூறி காலதாமதம் செய்து வந்தார். வழக்கு விசாரணை முடிந்து இந்த தேர்தலுக்கு முன்பாகவே தீர்ப்பு அறிவித்திருக்கப்படும். தீர்ப்பு தள்ளிப்போகலாம். பெங்களூர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் கூட நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். தண்டனை கிடைப்பது வேண்டுமானால் தள்ளிப்போகலாம். தாமதமாகலாம்.அவர் அணிந்திருந்த ஒட்டியாணம், வைர நகைகள், தலைகிரீடம் இதுவெல்லாம் யார் வீட்டு சொத்து. அனைத்தும் தமிழனின் சொத்து. ஏழை தமிழன் கொடுத்த வரிப்பணம். தமிழன் ஒரு முறை ஏமாந் தான். அதற்காக ஒவ்வொரு முறையும் ஏமாந்து விடுவான் என்று எண்ணிவிடக்கூடாது. .
தமிழகத்தின் 6வது முறையாக நீ தான் முதல்வராகவேண்டும் என்று நீங்கள் எல்லாம் கூறினீர்கள். நான் அதை பதவியாக நினைக்கவில்லை. உங்களுக்கு பணி விடை செய்யும் வாய்ப்பாக தான் கருதுகிறேன். இவனை விட்டால் நமக்கு ஒரு நல்ல வேலையாள் கிடைக்கமாட்டான் என்று நீங்கள் என்னும் அளவுக்கு தான் பணியாற்றி வருகிறேன்.
இங்கு காலையில் நான் வந்தது முதல் இரவு வரையிலும் எனக்காக காத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என தெரியவில்லை. என்னையே உங்களுக்கு தருவதை தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை. தந்தை பெரியாரின் எண்ணங்களை, அண்ணா வின் லட்சியங்களை ஏந்தி இந்த சமுதாயத்திற்கு உழைக்கும் பணியினை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். அந்த பணியை நீங்களும் தொடர்ந்து செய்யவேண்டும். தேர்தல் பணியாற்றுவதில் சில இடங்களில் ஒற்றுமை குறைவாக இருப்பது தான் குறை. அதை சரி செய்து ஒற்றுமையை உறவாக்கி, உறுதிப்படுத்தி வெற்றியை ஈட்டுவோம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

6வது முறையாக கருணாநிதி மீண்டும் முதல்வராவார் - கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேச்சு :

கோவை சிவானந்தா காலனியில் நேற்று நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் திமுக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து:
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை நிறைவேற்றாத திட்டங்களே கிடையாது. விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் தள்ளுபடி, பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம், முதியவர்களுக்கு உதவித் தொகை, இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு என சலுகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, விவசாயக் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். நான் ஒரு இடத்துக்கு ஓட்டு கேட்க சென்றபோது ஒரு மூதாட்டி மட்டுமே இருந்தார். அவரிடம் ஓட்டு கேட்ட போது கலைஞர் ஆட்சியில் நேரில் வந்து ஓட்டு கேட்க வேண்டுமா? எனக்கு எனது மகள், மகன் மற்றும் உறவினர்கள் யாரும் உதவவில்லை. ஆனால், முதல்வர் எனக்கும், எனது கணவருக்கும் உதவித் தொகை வழங்கி வருகிறார். எங்களது ஓட்டு முதல்வருக்குதான் என உறுதியாகக் கூறிவிட்டனர்.
எனவே, 6வது முறையாக கருணாநிதி மீண்டும் முதல்வராவார்.
இவ்வாறு செல்லமுத்து பேசினார்.
கொமுக பொதுச் செயலரும், சூலூர் தொகுதி வேட்பாளருமான ஈஸ்வரன்:
திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய மக்கள் காத்திருக்கிறார்கள். கூட்டணி கட்சியினரை முதல்வர் அரவணைத்து கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளார். ஆனால், 5 ஆண்டு விசுவாசமாக இருந்த வைகோ நிலை கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இத்தனை ஆண்டுகள் உடன் இருந்தவரை புறக்கணித்துவிட்டு மற்றொரு கட்சிக்கு 41 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார். ஆனால், அவர்களுக்கு ஜெயலலிதா முதல்வர் ஆவதில் விருப்பமில்லை.
கூட்டணி கட்சிகளில் உள்ள வேட்பாளர்களை உடன் அமர வைத்து முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று அறிக்கை விடப்படுகிறது. இது எனக்கு முதலில் புரியவில்லை. ஆனால், தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தில் தனது கட்சி வேட்பாளரை விஜயகாந்த் அடித்த போதுதான் தெரிந்தது. இருவரும் ஏன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய மறுக்கின்றனர் என்று.
இவற்றை மக்கள் விரும்பமாட்டார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6வது முறையாக மீண்டும் கலைஞர் முதல்வராவார்.
இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சின்னையன்:
இந்த வயதிலும் தமிழக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று முழு மனதுடன் முதல்வர் பாடுபட்டு வருகிறார். இவர்தான் தமிழகத்துக்கு முதல்வர் ஆகவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு சின்னையன் பேசினார்.
வால்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கோவை தங்கம்:
அதிமுக ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.77 கூலி வழங்கப்பட்டது. ஆனால், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் முதல்வரை நேரில் சந்தித்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறினேன். அதன்பின்னர், தொழிலாளர்களின்கூலி ரூ.130ஆக உயர்த்தப்பட்டது. முதன்முறையாக, வால்பாறை தொகுதிக்கு புதிய கலை அறிவியல் கல்லூரியை கொடுத்தார் முதல்வர். வால்பாறைக்கு கீழ் வசிக்கும் விவசாயிகளுக்கு 60 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசாணை இருந்தது. ஆனால், இதை மாற்றி 90 நாட்களுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் வழங்கி உத்தரவிட்டார். இவரே தமிழகத்தின் சிறந்த முதல்வர்.இவரும் அடுத்த முறை முதல்வாராக வரவேண்டும்.
இவ்வாறு கோவை தங்கம் பேசினார்.

No comments:

Post a Comment