கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

தி.மு.க. கூட்டணிக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - மு.க.அழகிரி பேச்சு


`தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஓய்வின்றி உழைக்க வேண்டும்.’ என திருப்பரங்குன்றத்தில் மத்திய அமைச் சர் மு.க.அழகிரி கூறினார்.
திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத் தார். அங்கு திரண்டிருந்த தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், பா.ம.க., பார்வர்டு பிளாக் ஆகிய கூட்டணி கட்சியினர் மத்தியில் தேர்தல் பணிகள் குறித்து மு.க.அழகிரி பேசியதாவது:

தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகள், தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் உள்பட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் குறிக்கோள். அதற்காக தி.மு.க. கூட்டணி கட்சியினர் முதல்வர் கருணாநிதி சொல்லி இருப்பது போல், தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி உழைக்க வேண்டும். விழிப் புடன் இருக்க வேண் டும்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் சுந்தர்ராஜன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் எம்.எல். ராஜ், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், துணை மேயர் மன்னன், முனியாண்டி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment