கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போட முயற்சி மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையருக்கு திமுக கடிதம்


மத்திய அமைச்சர் மற்றும் திமுக வேட்பாளர் மீது பொய் வழக்கு போடுமாறு தேர்தல் அதிகாரியை வலியுறுத்தும் மதுரை கலெக்டரின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையருக்கு திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு திமுக தேர்தல் குழு உறுப்பினர்கள் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியை மதுரை மாவட்டக் கலெக்டர் வற்புறுத்துவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. ஆனால், மத்திய அமைச்சர் மற்றும் வேட்பாளர் மீது பொய் வழக்குகளை தொடர தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
மதுரைக் கலெக்டரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் நிச்சயமாக மோசமான பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். எனவே, நேர்மையான, அமைதியான தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment