கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

வான்கடேயில் வரலாற்று நிகழ்வு - டோனிக்கு முதல்வர் வாழ்த்து


இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள தந்தியில் கூறியிருப்பதாவது:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது, உலக விளையாட்டுகளில் இந்தியா பிரதான சக்தியாக திகழ்வதை காட்டியுள்ளது. இந்த வெற்றி பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளது. மறக்க முடியாத புகழையும் ஈட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் எம்.எஸ்.டோனியை நாடு முழுவதும் ஒருமித்த குரலோடு மக்கள் பாராட்டியுள்ளனர். தமிழக மக்கள் சார்பிலும், என்னுடைய தனிப்பட்ட முறையிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment