நடிகர் வடிவேலுவின் பல கேள்விகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் திணறி வருகிறார் என்று பாக்யராஜ் பேசினார்.
திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் இஏபி சிவாஜியை ஆதரித்து, திருவள்ளூரில் நடிகர் பாக்யராஜ் 01.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல்வர் கருணாநிதி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், விஜயகாந்த் எதுவுமே தெரியாதது போல், கருணாநிதி என்ன செய்தார் என்று ஏக வசனத்தில் பேசி வருகிறார்.
அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால். இதைவிட என்ன செய்துவிட முடியும்? கொடுக்கப்பட்ட தொகுதிகளில் எப்படி ஜெயிப்பது என்று விஜயகாந்த் குழப்பத்தில் உள்ளார். பிரசாரம் செய்யும் இடங்களில் சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார். இதனால், ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.
‘தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரையும் விஜயகாந்த் சரியாக கூறினால், நான் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ என்று நடிகர் வடிவேலு கூறுகிறார். இதேபோல், அவர் கேட்ட பல கேள்விகளுக்கு, பதில் கூற முடியாமல் விஜயகாந்த் திணறி வருகிறார்.
தமிழகத்தில் திட்டங்களும் சாதனைகளும் தொடர, தமிழகம் வளம்பெற மீண்டும் 6 முறையாக கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும். எனவே, திமுக வேட்பாளர் சிவாஜிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
கூட்டத்தில்ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் கா.மு.தயாநிதி, நகரமன்ற தலைவர் பொன்.பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment