கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

பொய்யான தகவல்களைகூறி மக்களை ஏமாற்றுகிறார் ஜெ - மு.க. ஸ்டாலின் தாக்கு


திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் நேரு, மண்ணச்சநல்லுரில் போட்டியிடும் அமைச்சர் செல்வராஜ் மற்றும் கிழக்கு தொகுதி, திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 02.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டு உங்கள் ஆதரவை உரிமையோடு கேட்க வந்திருக்கிறோம். நாங்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் போன்ற அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியுள் ளோம். எதிர் கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சி தலைவரை பற்றி நான் அதிகம் கூற தேவையில்லை. வடிவேலு கிழிகிழியென கிழித்துக்கொண்டிருக்கிறார்.
முதல்வர் கருணாநிதி தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஏழை பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த முறை வெற்றி பெற்றால் 30 ஆயிரமாக வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த கடன் தொகையை ரூ.4 லட்சம் வரை கடன் வழங்க போவதாகவும், அரசு ஊழியர்களுக்கு 4 மாத மருத்துவ விடுப்பு, முதியோர் உதவித்தொகை ரூ.750, கர்ப்பிணிகளுக்கு ரூ.10 ஆயிரம், 50 வயது அடைந்த முதியோருக்கு இலவச பஸ் பாஸ் என அறிவித்துள்ளார்.
கடந்த முறை இலவச டிவி வழங்கப்பட்டது போல் இந்த முறை மகளிர் துயர் துடைக்க கிரைண்டர், மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வந்து தான் பெருமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவர். அவர் ஏன் மீண்டும் முதல்வராக வேண்டும் என கூறுகிறோம் என்றால் அது மக்கள் நலனுக்காகத் தான். கடந்த 5 ஆண்டுகளில் விடுபட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத்தான்.
முதல்வர் கருணாநிதி 234 தொகுதியிலும் கட்சி பாகுபாடின்றி மக்கள் பணி செய்தவர். அவர் ஒரே கையெழுத்தில் 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தார். அதில் அதிகம் பயனடைந்தவர்கள் அதிமுகவினர்தான்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இந்த ஊர் தனது பூர்வீகம் எனக்கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் 1989ம் ஆண்டில் இருந்து தேர்தலில் நின்று வருகிறார். ஸ்ரீரங்கம் அவரது பூர்வீகம் என்பது இப்போது தான் தெரிந்ததா? ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடாமல் கொளத்தூரில் போட்டியிடுவது ஏன் என்று என்னைப் பார்த்து ஜெயலலிதா கேட்கிறார்.
இந்த முறை இளைஞரணியை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற நோக்கில்தான் நான் கொளத்தூருக்கு சென்றுள்ளேன். ஆனால் பூர்வீகம் என்று கூறும் ஜெயலலிதா இதுவரை ஸ்ரீரங்கத்தில் ஏன் நிற்கவில்லை. பொய்யான தகவல்களை கூறி ஸ்ரீரங்கம் தான் பூர்வீகம் என மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கிறார். நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என்பது தெரியும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment