கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

திமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்கு - தேர்தல் பார்வையாளர்களிடம் திமுக சார்பில் புகார் மனு


தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வ தாக மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளர்களிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட தேர் தல் பார்வையாளர்கள் அனில்குமார், ஷிண்டே ஆகி யோரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி சார்பில், திமுக வழக்கறிஞர்கள் அணியை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, வழக்கறிஞர் சாரங்கன், கருணாநிதி உள்பட நூற்றுக்கும் மேற் பட்ட வழக்கறிஞர்கள் சர்க் யூட் ஹவுஸில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

வேலுச்சாமி, குழந்தைவேலு நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதர வாக அரசியல் கட்சித் தொண் டர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது வாடிக்கை. இது சட்டத்திற்கு உட்பட்டதும் கூட. ஆனால், மதுரையில் உள் போலீசார், திமுக தொண்டர்களை பிரசாரம் செய்யவிடாமல் தடுத்து, அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இதுவரை திமுக தொண்டர்கள் மீது எட்டுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

ஒரு சில இடங்களில், குண்டர் சட்டத்தின் கீழ் உங் களை கைது செய்வோம் எனவும் மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் பார்வையாளர்கள், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இதுதொடர்பான தகவல்களை தெரிவிக்கிறோம் என்று கூறினர்.

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை அரசியல் கட்சிகளே வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை இயக்குநர் சீமான் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசியுள்ளார். அவர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இந்தத் தகவல்களை மனுவில் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment