கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

மிக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தி.மு.க.வுக்கு ஆதரவுதமிழ்நாடு மிக பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு கூட்டம் கோவையில், மண்டலத் தலைவர் கேசவமூர்த்தி தலைமையில் நடந்தது. மண்டல செயலர் முருகன் வரவேற்றார். மண்டல பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். கூட்டத்தில், நிர்வாகிகள் மந்தராச்சலம், டோப்பாஸ் அய்யர், பழனிசாமி, ஜோதி, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.வுக்கு டிப்ரஸ்டு கிளாசஸ் ஆதரவு :

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் தலைமையில் தாழ்த்தப்பட்டோருக்காக, ‘டிப்ரஸ்டு கிளாசஸ்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது, அந்த அமைப்பின் காப்பாளராக நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் உள்ளார். இந்த அமைப்பின், தமிழக தலைவர் அருள்தாஸ் வெளியிட்ட அறிக்கை:
எங்கள் அமைப்பின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் 29ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது என்றும், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment