கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி மத்திய திட்டங்கள் கிடைக்காமல் செய்வார் - பாக்யராஜ் பேச்சு


வேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் 03.04.2011 அன்று மாலை சைதாப்பேட்டை மெயின் பஜாரில் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்தார், என்னென்ன செய்யப்போகிறார் என்ற பெரிய பட்டியலை வைத்துள்ளார். 37 இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு 2.60 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார். 12 இடங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகள், 8 இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்காகவும் கருணாநிதி நிறைய செய்துள்ளார்.
ஒரு கப்பலின் கேப்டன் கடலில் திசை தெரியாமல் சென்று விட, கப்பலில் இருந்த எல்லாரும் பசி, பட்டினியால் ஒருவரையொருவர் அடித்து கொன்று சாப்பிடும் நிலை வந்தது. ஒரு நாள் கப்பல் கேப்டன், நமக்கும் அந்த நிலை வரலாம். அதற்கு முன்பு நாமே அனைவருக்கும் உணவாக நினைத்து நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அப்போது ஒரு பெண், கேப்டனை பார்த்து நெஞ்சில் வைத்து சுட்டுக்கோ. எனக்கு மூளை கறிதான் ரொம்ப பிடிக்கும் என்றார். அந்த நிலைதான் விஜயகாந்துக்கும் வரும். ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. அவர் பதவிக்கு வந்தால் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பார். அதனால் மத்திய அரசின் திட்டங்கள் நமக்கு கிடைக்காது. கருணாநிதி அதுபோல் இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக சென்று நல்ல திட்டங்களை நமக்கு பெற்றுத்தருவார்.

இவ்வாறு நடிகர் பாக்யராஜ் பேசினார்.

மத்திய அரசு திட்டங்கள் கிடைக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - நடிகர் பாக்யராஜ் பேச்சு :

‘மத்தியில் தோழமையோடு உள்ள தி.மு.க.விற்கு வாக்களித்தால் தான் மத்திய அரசு திட்டங்கள் வந்து சேரும்’ என நடிகர் பாக்யராஜ் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாக்ய ராஜ் பிரசாரம் செய்தார். கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள அண்ணா சிலை அருகே காங்., வேட்பாளர் சையத் கயாஸ் உல்ஹக்கை ஆதரித்து அவர் பேசிய தாவது:
போன முறை தேர் தலின் போது முதல்வர் கருணாநிதி, ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப் படும். டி.வி., வழங்கப் படும் என சொன்ன போது அனைவருக்கும் சந்தேகம் வந்தது. ஆனால், கடந்த 5 வருடத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கே கொடுத்தார். டி.வி.யும் கொடுத்தார். எனவே, தற்போது கொடுத்துள்ள வாக்குறுதி யையும் அவர் நிறைவேற்று வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கருணாநிதி என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பதை நான் பிரசாரம் செய்ய போகும் இடங்களில் கூடும் மக்களே சொல்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கு அதிகமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சொத்தில் சம பங்கு, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி செயல்படுத்தியும் வருகிறார்.
ஜெயலலிதாவோ ஒரு பெண்ணாக இருப்பவர். முதல்வராக இருந்தவர். ஆனால் அவர் பெண்களுக் காக எந்த திட்டத்தை யாவது செயல்படுத்தியுள் ளாரா?.
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சி இன்னும் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும். இந்த மூன்றரை ஆண்டு களில் தமிழகத்தில் உள்ள ஆட்சி ஒரு தோழமையான ஆட்சியாக இருந்தால் தான் நமக்கு மத்திய அரசு திட்டங்கள் வந்து சேரும். எனவே, மீண்டும் தமிழக முதல்வராக 6வது முறையாக தலைவர் கலை ஞரை அமர வைக்க வேண்டும்.
ஜெயலலிதா எல்லோரி டமும் சண்டை போடு பவர். அத்வானியை அம்னீசியா என்றும், நர சிம்மராவை ஜெனரேசன் கேப் என்றும், சென்னா ரெட்டியை என் சேலையை பிடித்து இழுத்தார் என்றும் கூறியவர். இவ்வாறு அனைவரிடமும் சண்டை போட்டவரை முதல்வராக ஆக்கினால் எந்த திட்டமும் நமக்கு கிடைக்காது. எனவே, தி.மு.க. தலைவரை மீண்டும் முதல்வராக்க ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள சின்னங்களில் வாக்களியுங்கள்.
இவ்வாறு நடிகர் பாக்யராஜ் பேசினார்.

No comments:

Post a Comment