கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

திமுகவை காப்பியடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்


திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக¢குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்&திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் தேவகோட்டையில் 29.03.2011 அன்று நடந்தது. நகர திமுக செயலாளர் மதார்சேட் தலைமை வகித்தார். நகராட்சித் தலைவர் வேலுச் சாமி வரவேற்றார். துணைத் தலைவர் பாலா, சுந்தரம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், துரை கருணாநிதி பேசினர்.
வேட்பாளர் கே.ஆர். ராமசாமியை அறிமுகம் செய்து வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக இருந்தும், தற்போது 6வது முறையாக போட்டியிடும் ராமசாமி மீது கட்சி வைத்திருக¢கும் நம்பிக¢கை வீண் போகாது. நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஐந்து ஆண்டுகளுக¢கு முன்பு, திமுக தேர்தல் அறிக¢கை வெளியிட்டது. அதை 1991ல் ராஜீவ்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக¢கையோடு ஒப்பிட வேண்டும். தேர்தல் அறிக¢கை என்றால் புலவர்கள், பேராசிரியர்கள்தான் எழுதுவார்கள். அது யாருக¢கும் புரியாது. பாமரனுக¢கும் புரியும்படி தேர்தல் அறிக¢கை வெளியிட்டது திமுக. அனைத்தையும் செயல்படுத்தியது. செய்வதைச் சொன்னது. சொன்னதைச் செய்தது. ஆனால் அது ஜெயலலிதா அம்மையாருக¢கு மட்டும் ஏனோ புரியவில்லை. இது சாத்தியமா, நடக¢குமா என கிண்டல் செய்தனர். ஏளனம் செய்தனர். இதைக¢கண்டு தி.மு.கவினர் கூட திகைத்தனர். சுதாரித்துக¢கொண்டு திமுக செய்து முடித்தது.
திமுக அரசின் சாதனை போல் எந்த மாநிலத்திலும் எந்த ஆட்சியும் செய்தது கிடையாது. கடந்த 3 ஆண்டுகளில், வன்முறையை கட்டுப்படுத்தி இருக¢கிறோம். தீவிரவாதிகளை சரணடையச் செய்திருக¢கிறோம். கருணாநிதி 70 ஆண்டுகால பொது வாழ்வில் தன்னை பெரியாரின் கொள்கையிலும், அண்ணாவின் கொள்கையிலும் ஆட்படுத்திக¢கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர் 70 ஆண்டுகளாக எழுதி, எழுதி, பேசிப்பேசி உழைக்கிறார். நீங்கள் 15 நாட்கள் மட்டும் உழைத்தாலே போதும். தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா. பத்திரிகைகளும், ஊடகங்களும் எங்களுக¢கு ஆதரவாகத்தான் இருக¢க வேண்டும். தேர்தல் கமிஷனுக¢கு ஆதரவாக இருக¢கக் கூடாது. தேர்தல் திருவிழா என்றால் கல, கலன்னு இருக¢க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகள் தவிர மற்ற இடங்களில் சுவர்களில் விளம்பரம் எழுதலாம். கிராமங்களில் வேட்பாளர், வீட்டுக¢காரர் அனுமதியோடு சுவர் விளம்பரம் எழுதுங்கள். போஸ்டர் ஒட்டுங்கள். துண்டு பிரசுரம் வெளியிடுங்கள். தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நல்ல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இதை காப்பியடித்து ஜெயலலிதா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி ஜனநாயகத் திரு விழா நடக¢கிறது. காங்கிரசை வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு பேசினார்.
மீராஉசேன் நன்றி கூறி னார். முப்பையூர், வெட்டிவயல், மேல்காரைக¢குடி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

No comments:

Post a Comment