கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு : மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர்


கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாஅத் கொள் கை கூட்டமைப்பு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால் வை அணிவித்து, கோ ரிக்கை மனுவும் கொடு த்தனர்.
கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா தலை¬ மயில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் 70 பேர் 03.04.2011 அன்று கோவை ரெசிடென்சி ஓட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சால்வை அணிவித்து தங்களது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர். பின்னர், ஒரு கோரிக்கை மனுவும்கொடுத்தனர்.
அதில், ‘’கோவை மாவட்டத்தில் அபுல்ஹசன் பார்கவியை டவுன் ஹாஜி யாக நியமிக்கவேண்டும்.
தமிழக ஹஜ் கமிட்டி மற்றும் வக்பு வாரியத்தில் எங்களது கூட்டமைப்புக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்ய வேண்டும். இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக் கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவதாக திமுக தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்கு திமுக காயிதே மில்லத் காலத்தில் இருந்தே உறுதுணையாக இருந்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு றுதி கொடுக்கும் இயக்கம் திமுக அல்ல. வாக்குறுதி கொடுக்காதவற்றையும் நிறைவேற்றி தந்துள் ளோம். அதுதான், 3.5 சதவீத இடஒதுக்கீடு. இதை, 5 சதவீதமாக உயர்த்திக்கொடுப்போம் என உங்களு க்கு உறுதியளிக்கிறேன்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டபோது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இருந்து ஒரு சீட்டை விட்டுக்கொடுத்தது. இது, அந்த கட்சியின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதேபோல், திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறது. இஸ்லாமிய மக்களின் கோ ரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்.
இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment