கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 5, 2011

230 தொகுதிக்கு மேல் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் - நடிகை குஷ்பு


சட்டமன்ற தேர்தலில் 230 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் நடிகை குஷ்பு 04.04.2011 அன்று தஞ்சை வந்தார்.
அப்போது, நடிகை குஷ்பு அளித்த பேட்டி:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நான் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறேன். திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். நாங்கள் திமுகவின் சாதனைகளைக்கூறி பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம். எதிர்க்கட்சியினர் திமுகவை திட்டி ஓட்டுக்கேட்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு திமுகவின் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனவே, தமிழகத்தில் 230 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றிபெறும். திமுகவுக்கு ஓட்டு கேட்டு கடந்த 12 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன்.
பிரசாரத்தின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறேன். நாளை(இன்று) திமுக தலைவர் போட்டியிடும் திருவாரூரில் பிரசாரம் செய்கிறேன். முதல்வர் தனது சொந்த மண்ணில் போட்டியிடுகிறார். மக்கள் அவரை அமோகமாக வெற்றிபெற செய்வார்கள். இம்மாதம் 11ம் தேதி வரை நான் பிரசாரம் செய்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்கிறேன். திரைப்பட நடிகர்களும் பிரசாரத்துக்கு வந்துள்ளனர். சினிமாவை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment