கிராமங்களில் அனைத்து வசதிகளையும் தி.மு.க. ஆட்சி செய்து தந்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 12.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் குழு உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ஸீ1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களை அணுகி பயன் பெற, படிப்படியாக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. 2008&09ம் ஆண்டு 25,000 இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்காக ஸீ20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், நோக்கியா, டி.வி.எஸ் போன்ற சிறந்த நிறுவனங்கள் மூலம் இதுவரை 40,123 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளித்துள்ளது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணிகள், 16 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய 70 வட்டாரங்களிலுள்ள 2,509 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக 50 வட்டாரங்களுக்குட்பட்ட 1661 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கிராமப்புறங்களில் தொழில் நிறுவனங்கள் உதவியுடன் 1 லட்சத்து 15,838 இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு 95,120 இளைஞர்கள் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவை தவிர 24,352 இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். 2,736 கிராம ஊராட்சிகளில் இளைஞர் துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியில் 20% இளைஞர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் இளைஞர்களை ஈடுபடுத்தி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் பயனுள்ள செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. கல்வி மையங்கள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையங்கள், கிராம தகவல் மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை இந்த செயல்பாடுகளில் அடங்கும். சுனாமி அவசரகால உதவித் திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மாநிலத்தின் 12 ஊரக கடலோர மாவட்டங்களில் 1602 குடியிருப்புகள் அடங்கிய 257 கடலோர கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ், சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி, பொருளாதார மேம்பாட்டு உதவி, மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானிய உதவி ஆகியவை வழங்குவதில் இலக்கீடு 100% எய்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உதவி 70,655 பேருக்கு 154.99 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் வங்கிகளில் கடன் பெறுவது கடினமானதாக உள்ளது. கடலோர மாவட்ட மாற்றுத் திறனாளிகள், ஒவ்வொருவருக்கும் ஸீ10,000 மானியமாக அளித்து சுயதொழில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 34,634 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸீ34.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கென அன்னை தெரசா மகளிர் வளாகம் மற்றும் 6 திட்டங்கள் ஏறத்தாழ ஸீ26.38 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடல் பாதுகாப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடல் பாதுகாப்பு முறைகளில் ஸீ1.13 கோடியில் இதுவரை 31,959 மகளிருக்கும், 36,890 மீனவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏழு கடலோர மாவட்டங்களில் உள்ள 93 மீனவர் சங்கங்களுக்கு ஸீ2.96 கோடி ரூபாய் நடைமுறை மூலதனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வங்கிக் கடனும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் பெறுவது தடுக்கப்பட்டு, இச்சங்கங்கள் சுயமாகச் செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 மீனவர் சங்க உறுப்பினர்கள் நேரடியாகவும் சுமார் 20,000 மீனவர்கள் பயனாளிகளைச் சார்ந்தும் பயன்பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 நேரடி கொள்முதல் நிலையங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஸீ1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ஸீ4.06 கோடி செலவில் 11 கடலோர மாவட்டங்களில் 9 பால் குளிரூட்டும் நிலையங்கள், 37 பால் விநியோகிக்கும் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் 160 பால் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. இந்த தொழிலில் ஈடுபடும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,645 பேருக்கு பால் உற்பத்தி மற்றும் கறவை மாடுகள் பராமரித்தல் குறித்த பயிற்சியும், 400 பேருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 160 பால் கூட்டுறவு சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஸீ80 லட்சம் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 250 நெசவாளர்களுக்கு ஸீ 61.09 லட்சத்தில் திறன்வளர்ப்பு பயிற்சி மற்றும் அவர்களது கைத்தறிகளை மேம்பாடு செய்து புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் ஸீ67.49 லட்சம் செலவில் சுமார் 1000 கைவினைஞர்கள் பயன்பெறும் கைவினைஞர் கிராமம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கடலோர ஊராட்சிகளில் சுமார் 699 கி.மீ. நீளத்திற்கு 610 சாலைப் பணிகள் ஸீ 89 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. கடலோர ஊராட்சி மன்றக் கட்டிடங்களைப் புதுப்பித்தல், கூட்ட அரங்குகள் கட்டுதல் ஆகிய 196 பணிகள் ஸீ5.54 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டாமல் விலகிய 2,687 வீடுகள் கட்டும் பணி சுமார் 65.81 கோடி மதிப்பீட்டில் அரசால் முடிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் ராஜீவ்காந்தி மறுவாழ்வுத் திட்டத்தில் ஸீ57.34 கோடியில் செய்யப்பட்டன. ஸீ40.59 கோடியில் 133 உட்புற சிமென்ட் கான்கிரீட் சாலைகள், ஸீ5.49 கோடியில் 5,495 சுகாதார கழிப்பறை வசதிகளும், ஸீ2.76 கோடியில் தாழ்வான நிலப்பகுதிகளில் மண் நிரப்பும் பணிகளும், ஸீ 5.47 கோடியில் தெருவிளக்குகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்புகள் அமைக்கும் பணிகளும் முடிவு பெற்றுள்ளன.
11 கடலோர மாவட்டங்களில் ஏறத்தாழ 18,299 வீடுகளை ராஜீவ்காந்தி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஸீ499.22 கோடி செலவில் மீளக் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, 17,094 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1,205 வீடுகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நெறிமுறைகளின்படி அடிப்படை வசதிகளான சிமென்ட் சாலைகள், தார்ச் சாலைகள், குடிநீர் வழங்கல், தெரு விளக்குகள், குளம் சீரமைத்தல், மயானம் சீரமைப்பு, அங்கன்வாடி மையங்கள்/சமையல் கூடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் ஸீ68.14 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மீளப் பெறவும், பாதிப்படைந்த வீடுகளை மீளக் கட்டிடவும் தமிழ்நாடு அரசு உலக வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் அவசரகால சுனாமி மறுகட்ட மைப்புத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு, இத்திட்டத்தின் கீழ் கடல் உயர் அலை ஏற்றத்திலிருந்து 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தொலைவிற்குள் உள்ள எளிதில் பாதிக்கக் கூடியவையாக அறியப்பட்ட வீடுகளை பாதுகாக்கும் வகையில் மீண்டும் கட்டித் தர முடிவு செய்துள்ளது.
அதன்படி எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கண்டறியப்பட்ட ஏறத்தாழ 17,000 வீடுகளை கட்டித் தருதல், அவசர காலத்தில் எளிதாக வெளியேறி தப்பித்து செல்லத் தேவையான வெளியேறும் சாலைகளை அமைத்தல், மேலும் வெளியேறும் சாலைகளில் பாதுகாப்பானப் பகுதியினைச் சென்றடைய ஏதுவாக வழிகாட்டுப் பலகைகள் அமைத்துத் தருதல் ஆகிய பணிகள் செய்யப்படும்.
11 கடலோர மாவட்டங்களில் 15,056 வீடுகள் மீளக்கட்ட தகுதியுடையவைகளாகக் கண்டறியப்பட் டுள்ளன. 15,056 வீடுகள் புதியதாக கட்டுவதற்காக 157 தொகுப்புகளாக எடுக்கப்பட்டு இதுவரை 14,429 எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகள் அகற்றப்பட்டு, 13,070 வீடுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் டிசம்பர் 2011க்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநில அரசிலும், மைய அரசிலும் பங்கு பெற்று மகத்தான தொண்டு புரிவதற்கு ஏற்றவர்களாக இளைஞர்களை உருவாக்கும் பாசறைகள் போல விளங்கிடும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உதவியோடு இந்த அரசு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைவிடாத முயற்சிகளின் காரணமாக கிராமப்புறங்களில் சாலைகள், குடிநீர் வசதி, மின் வசதி, கல்வி வசதி, விளையாட்டு வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, கால்நடை மருத்துவ வசதி போன்றவைகளையும் இன்னபிறவற்றையும் உருவாக்கி, எல்லா வசதிகளும் எங்கும் உள்ளன என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment