தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் திருமாவளவன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12.03.2011 அன்று இரவு 7.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார்.
அவருடன் ரவிக்குமார் வந்திருந்தார். அவர்கள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினரை சந்தித்து தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசினார்கள். பின்னர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.
சந்திப்பு முடிந்த பின் திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி 99.99 சதவீதம் முடிவடைந்து விட்டது. கூட்டணி தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதி தொகுதிகள் பட்டியலை வெளியிடுவார்” என்றார்.
No comments:
Post a Comment