கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் தேதி மாற்றம்: திமுக தலைமைக் கழகம்தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்பவர்கள் வரும் 5ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுவை மாநில சட்டப் பேரவை பொதுத்தேர் தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 7ந் தேதி திங்கட்கிழமை வரை தலைமை கழகத்தில் விண்ணபித்திடலாம் என அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றம் செய்யப்பட்டு 5ந் தேதி சனிக்கிழமைக்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு புதுவை மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம்: பொதுத் தொகுதி ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.2,500. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவம் தலைமை கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment