திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் 06.03.2011 அன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்தனர்.
திமுக பொருளாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை, அருந்ததி மக்கள் கட்சி தலைவரும் வாரிய தலைவருமான வலசை ரவிச்சந்திரன், நிர்வாகிகள் எம்.பி.கோவிந்தசாமி, இ.பி.துரைசாமி, வி.ராணி, வி.சிட்டிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர் முன்னேற்றக் கழக நிறுவனர் கே.பி.சுப்பையன், தலைவர் ஆர்.எம்.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகள், அமைப்புகள் விபரம்:
கிறிஸ்தவ மக்கள் கழகம் தலைவர் ஜெ.மா.மைக்கேல், அருந்ததியர் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் மரு.துரை, தேசிய சிறுபான்மை கழக தலைவர் என்.எம்.சதக்கத்துல்லா மவுலானா, தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் இரா.பாக்கியநாதன், இந்திய தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ம.மருதுபாண்டி, இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.அன்பழகன்,
அகில இந்திய தலித் சிறுபான்மை இளைஞர்கள் சமூக நீதிப்பேரவை நிறுவனர் ஜெயம் புஷ்பராஜா, திராவிட மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் உறந்தை வி.வேலுசாமி, முஸ்லீம் மக்கள் கழக தலைவர் ஜைனுதீன், தமிழ் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் திண்டிவனம் அன்பரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாகவும் உறுதி அளித்தனர்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக அருந்ததி மக்கள் கட்சி தேர்தல் பிரசாரம் :
திமுக கூட்டணிக்கு ஆதரவாக அருந்ததி மக்கள் கட்சி தேர்தல் பிரசாரம் :
திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய அருந்ததி மக்கள் கட்சி குழு அமைத்துள்ளது.
முதல்வர் கருணாநிதியை அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், 06.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அதன் பின், நிருபர்களிடம் வலசை ரவிச்சந்திரன் கூறியதாவது:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலக வேண்டும் என்று எடுத்த முடிவை வரவேற்கிறோம். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸ் விலகலால் எந்த பாதிப்பும் இல்லை. அருந்ததி மக்கள் கட்சியினர், திமுக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்வார்கள்.
எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி பற்றிய விவரத்தை முதல்வர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார். திமுக கூட்டணி, வெற்றிக் கூட்டணி. தேர்தல் பிரசாரம் செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த பகுதி வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள். நானும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு வலசை ரவிச்சந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment