கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 6, 2011

காங்கிரஸ் விலகியதால் பாதிப்பு இல்லை: பாமக


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறாவிட்டாலும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து, அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன், தமிழரசன் ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் 06.03.2011 அன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதியையும் பாமக குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,

திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பின் இன்றுதான் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினோம். இந்த பேச்சு மகிழ்ச்சிகரமாக இருந்தது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை திமுக குழுவிடம் கொடுத்தோம். அதற்கான பேச்சுவார்த்தையும் சுமூகமாக இருந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மனதார விரும்பினார். அவர்களை இழுத்து, இழுத்து பிடிக்க பார்த்தார். முடியவில்லை. இந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவது முழுவதுமாக முற்று பெறவில்லை. காங்கிரஸ் விலகினால் கூடுதல் சீட் கேட்பீர்களா என கேட்கிறீர்கள். இதுபற்றி திமுக கூட்டணி தலைவர் கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் வெளியேறினால் திமுக கூட்டணியின் வெற்றி பாதிக்காது. திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம், இலவச கலர் டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உள்ளிட்ட திமுகவின் சாதனை திட்டங்கள் ஏராளமாக உள்ளன. எனவே 6வது முறையாக முதல்வராக கருணாநிதி மீண்டும் வருவார்.

பாமக போட்டியிடும் தொகுதிகளை இனம் காண்பது குறித்த எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. இனி தொகுதிக்கு பிரசாரத்துக்கு செல்ல வேண்டியதுதான் பாக¢கி. பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை முதல்வர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.


No comments:

Post a Comment