
“தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது பற்றி ஓரிரு நாட்களில் தெரியும்” என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் 06.03.2011 அன்று மாலை நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
கூட்டணியில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்து 24 மணி நேரம் ஆகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து யாராவது உங்களிடம் பேசினார்களா..?
இல்லை.
உங்கள் கூட்டணிக்கு வேறு கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?
இருக்கிறது.
எந்தெந்த கட்சிகள்? இடதுசாரிக் கட்சிகளுடன் பேசி இருக்கிறீர்களா?
இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியும்.
தி.மு.க. மொத்தம் எத்தனை இடங்களில் போட்டியிடும்.?
பத்திரிகைகளில் அந்த எண்ணிக்கையும், அங்கே போட்டியிடுபவர்களின் பெயர்களும் வெளியிடப்படும்.
காங்கிரசுடன் மோதல் வர அந்த 3 இடங்கள்தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா?
அதுவும் ஒரு காரணம்.
இன்றைய கூட்டத்தில் ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?
எந்த கூட்டமும் நடைபெறவில்லையே!
இவ்வாறு கருணாநிதி பதில் கூறினார்.
‘போட்டி இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும்’ - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் இல்லாமல் தென் மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடுமையாக இருக்குமே?
கடுமையான போட்டி இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும், ஜெயிக்கவும் முடியும்.
மத்திய அமைச்சர் பதவிகளை ராஜானாமா செய்வதால் சந்தோஷமா?
உங்களுக்கு சந்தோஷம் என்றால், எங்களுக்கும் சந்தோஷம்.
காங்கிரஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
No comments:
Post a Comment