கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்கள் - முதல்வர் கருணாநிதி மகளிர் நாள் வாழ்த்து


நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி தனது மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை வலியுறுத்தி கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள் 1857 மார்ச் 8ம் நாளாகும். அந்த நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திட பெரிதும் பயன்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார், அண்ணா அறிவுறுத்திய சமத்துவ சமதர்ம கொள்கைபடி பெண்கள் கல்வியறிவு பெற்று வேலை வாய்ப்பு எய்தி பொருளாதார தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. அரசு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
1973ல் இந்தியாவிலேயே முதன்முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்யப்பட்டு மகளிர் பலர் இன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளாக விளங்குகின்றனர். 1989ல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம்
ஸீ1068
கோடிக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
மூவலூர் முதாட்டியார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996ல்
ஸீ10
ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 2001ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்தது. ஆனால் ஏழை எளிய மகளிர் முன்னேற்றம் கருதி தி.மு.க. அரசு 2006ல் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை
ஸீ15
ஆயிரமாக உயர்த்தியதுடன் 2008ல்
ஸீ20
ஆயிரம் எனவும் 2010ல்
ஸீ25
ஆயிரமாகவும் உயர்த்தி கடந்த 5 ஆண்டுகளில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஏழை மகளிர் திருமணங்களுக்கு
ஸீ832
கோடியே 10 லட்சம் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது.
ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும் எனக் கருதி 1989ல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவச பட்டப் படிப்பு திட்டம், 2007ல் முதுநிலை பட்டப்படிப்பு வரை நீடிக்கப்பட்டு மகளிர் பயன் அடைகின்றனர்.
இவை மட்டுமல்லாமல் 1990ல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம், அதே ஆண்டில் பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்திடும் தனிச் சட்டம், 1996ல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், 2006ல் ஏழை எளிய தாய்மார்களின் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள், எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம், ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு
ஸீ6
ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம், 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு மாதம்
ஸீ500
உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உட்பட பல்வேறு திட்டங்களை உருவாக்கி பெண்கள் முன்னேற திமுக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும் தமிழக மகளிர் அனைவரும் சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்த நன்னாளில் உளமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment