காங்கிரஸ் முன்னாள் மத் திய அமைச்சர் அர்ஜூன் சிங் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி 04.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
என்னுடைய கெழுதகை நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான அர்ஜூன்சிங் மறைந்துவிட்ட செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட பெரிதும் உதவியவர்.
மைசூரில் இருந்த செம்மொழி தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மாற்றுவதற்கு காரணமாக இருந்தவர். தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை இனிய முகத்தோடு நிறைவேற்றிக் கொடுத்தவர்.
நான் டெல்லிக்கு செல்லும்போது, அவரை சந்திக்க நேரம் கேட்டால், அவர் உடனடியாக தமிழ்நாடு இல்லத்திற்கே வருகை தந்து என்னைச் சந்திப்பதை தொடர் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருமுறை அவருடைய இல்லத்திற்கே நான் சென்ற போது வாசல் வரை வந்து என்னை வரவேற்றும் வழியனுப்பி வைத்தும் அளவளாவிய அருமை நண்பரை நான் இழந்து விட்டேன்.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள் ளார்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள் ளார்.
No comments:
Post a Comment