திமுக கூட்டணிக்கு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திமுக தலைமை 04.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியை சந்தித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்போம். திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.
அதேபோல், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அச.உமர்பாருக் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு போயர் (ஓட்டர், பண்டி, கொட்டா) முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.பி.குமாரவேல்சாமி, மாநிலப் பொருளாளர் எம்.சாம்பசிவம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment