தி.மு.க. கூட்டணியை ஆதரித்து எம்.ஜி.ஆர். கழகம் தேர்தல் பணியாற்றும் என, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். கழகம் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் எம்.ஜி.ஆர். கழகம் வழக்கம்போல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பணியாற்றும்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் தொடர்புகொண்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக பாடுபடக் கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பெறப்போகிறது. அந்த வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் உறுதியுடன் பாடுபட வேண்டுகிறேன்.
இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment