கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 4, 2011

தி.மு.க.வில் 8000 விருப்ப மனுக்கள் - 05.03.2011 கடைசி நாள்


சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட இதுவரை 8000 விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. மனு தர நாளை கடைசி நாள் ஆகும்.
சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில் பெறப்பட்டு வருகின்றன. விருப்ப மனு தருவதற்கு நாளை(5ம் தேதி) கடைசி நாள் ஆகும். தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து விருப்ப மனுக்கள் தந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 8000 விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.

03.03.2011 அன்று அமைச்சர்கள் ஐ.பெரியசாமி - ஆத்தூர், பூங்கோதை - ஆலங்குளம், கே.என்.நேரு - லால்குடி, மற்றும் மேயர் மா.சுப்பிரமணியன் - சைதாப்பேட்டை, சி.சண்முகம் மகன் நடிகர் வெற்றிவேல், ஆர்.எஸ்.பாரதி - ஆலந்தூர், கருப்பசாமி பாண்டியன் - தென்காசி, சகாயராஜன், மனைவி ரோஸ்லட் மேரி &-பத்மநாபபுரம், குளச்சல், கோவை மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் - தொண்டாமுத்தூர்.
செந்தில்குமார் - பழனி, தங்கமாங்கனி - ராஜபாளையம், சிவகாசி, சன் பிராண்ட் ஆறுமுகம் - காஞ்சிபுரம், தொ.மு.ச. நிர்வாகி பி.செல்வராஜ் - அம்பத்தூர், பி. ராதாகிருஷ்ணன், கண்ணதாசன் - திருவொற்றியூர், செங்குட்டுவன் - கிருஷ்ணகிரி, புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் - நெல்லித்தோப்பு, எம்.ஏ.சுப்பிரமணியன் - முத்தியால் பேட்டை, சிவா - உருளையன்பேட்டை உள்ளிட்ட ஏராளமானோர் மனுக்கள் தந்தனர்.

No comments:

Post a Comment