கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 6, 2011

திமுக ஆட்சியில் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன: கலைஞர்


தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, முதல் அமைச்சர் கருணாநிதி 05.03.2011 அன்று வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வித்துறை பிரிப்பு

கல்வித் துறை ஒரே துறையாகவும், ஒரே அமைச்சரின் கீழும் செயலாற்றியதை மாற்றி, அதனை இரண்டு துறையாக அமைத்ததும் தி.மு.க. அரசுதான்; கல்விக்காக இரண்டு அமைச்சர்களை நியமித்ததும் தி.மு.க. அரசுதான். இது ஒன்றிலிருந்தே இந்தத் துறைக்காக தி.மு.க. அரசு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

2006 ம் ஆண்டுக்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித்துறை என்பது 2006 ல் பள்ளிக் கல்வித்துறை எனவும், உயர்கல்வித்துறை எனவும் தனித்தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டு; உயர்கல்விக் கெனத் தனி அமைச்சகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.

பொது நுழைவுத் தேர்வு ரத்து

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 5 3 2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வு இருந்தபோது, 2006 ல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007 ல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008 ல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009 ல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010 ல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.

தமிழ் வழி கல்வி

2006 ல் நுழைவுத் தேர்வு இருந்தபோது, தமிழ்வழியில் பிளஸ் 2 பயின்ற 11 ஆயிரத்து 799 மாணவர்கள் மட்டுமே ஒற்றைச் சாளர முறையின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்; நுழைவுத்தேர்வு ரத்து செய்த பிறகு, இந்த மாணவர்கள் எண்ணிக்கை 2007 ல் 19 ஆயிரத்து 966 எனவும், 2008 ல் 34 ஆயிரத்து 39 எனவும், 2009 ல் 35 ஆயிரத்து 434 எனவும், 2010 ல் 54 ஆயிரத்து 460 எனவும் அதிகரித்து; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் பயன்பெற்றனர்.

2010 2011 ம் கல்வியாண்டு முதல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு; அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் 12 ஆயிரத்து 784 பட்டமேற்படிப்பு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

2007 ம் ஆண்டு வரையில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் செலுத்தி வந்த 2,500 ரூபாய் கல்விக்கட்டணம் 2008 2009 ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு; 2010 2011 ம் ஆண்டு வரையில் 63 ஆயிரத்து 192 மாணவ மாணவியர் பயனடைந்தனர்.

கல்வி கட்டணம் விலக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களிக்கப் பட்டுள்ளது.

அரசுக் கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்திட அகல்கற்றையுடன் கூடிய இணையதள வசதிகள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் அரசுக் கல்லூரிகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 2 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 27 அரசுக் கல்லூரிகளுக்கு 681 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.


முன்னோடி திட்டம்

சென்னை மாநிலக் கல்லூரியின் மாலை நேரப் பகுதிப் பிரிவில் 2007 2008 கல்வியாண்டு முதல் இந்தியாவிலேயே ஒரு முன்னோடித் திட்டமாக செவித்திறன் குறைந்தோர்க்கு தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பி.காம். (பொது), பி.சி.ஏ. (கணினி பயன்பாடு) ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.


அரசு பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவுகள் அனைத்தும் பொதுவகை பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டு, கல்விக் கட்டணம் குறைந்து, ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிவகுக்கப்பட்டுள்ளது.


மதிப்பெண் குறைப்பு


2006 ம் ஆண்டு வரையில் அரசு பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர் செலுத்தி வந்த கல்விக் கட்டணம் 12,550 ரூபாய் 2006 2007 ம் ஆண்டு முதல் 7,550 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை இந்தியாவிலேயே முதன்முறையாக 2010 2011 ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008 2009 ம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கானக் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் குறைத்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.


சலுகை கட்டணம்


அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் 2007 2008 ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2010 2011 ம் ஆண்டு வரை 33,250 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


2006 ம் ஆண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில்தான் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன.


இலவச பயண அட்டை


ஆனால், 2007 2008 ம் ஆண்டு முதல் தி.மு.க. அரசினால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பயணப் பேருந்து அட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2009 2010 ம் ஆண்டு வரையில், 4,35,356 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.


2006 ம் ஆண்டு வரை ஒரு கல்லூரியில் சேர்க்கைபெற ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. 2007 2008 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்லூரியையும் தனி அலகாகக் கொண்டு ஒரு மாணவன் தான் விரும்பும் பாடப்பிரிவுகளைக் குறிப்பிட்டு ஒரேயொரு விண்ணப்பம் அளித்தால் போதுமானது என ஆணையிடப்பட்டு; அதன்படி, மாணவர்களின் தகுதி அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவு கலந்தாய்வு முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெற்றோரும் மாணவரும் பெரும் பயன் எய்தி வருகின்றனர்.


ஒற்றைச்சாளர முறை

007 2008 ம் ஆண்டு முதல் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு; கலந்தாய்வு மூலம் மாணவ மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். 2006 2007 ம் ஆண்டு முதல் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாற்று முறை நடைமுறைப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.


2009 2010 ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மாற்றுமுறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைகின்றனர்.


அரசு ஒதுக்கீடு


2006 க்கு முன்னர் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 30 விழுக்காடு இடங்களும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருந்தன. சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக 2006 2007 ம் ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்கள் எனவும், சிறுபான்மையல்லாத கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டு; ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர்.


அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு நிதியுதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழக உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் 2005 2006 ம் கல்வியாண்டில் 4,917 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தி.மு.க. அரசு தொடங்கிய பொறியியல் கல்லூரிகளால் 2010 2011 ம் கல்வியாண்டில் 12,142 ஆக அதிகரித்தது.


செம்மொழி மாநாடு


2010 ம் ஆண்டு ஜபுன் மாதத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த தருணத்தில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தாய்மொழியில் கற்க தமிழ்மொழி மூலமாகக் கற்க வகைசெய்து இந்த அரசு ஆணையிட்டு; இந்த ஆண்டில் இப்பாடப் பிரிவுகளில் 2010 2011 ல் நிர்ணயிக்கப்பட்ட 1,400 இடங்களில் 1,378 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.


2009 2010 ம் கல்வியாண்டுவரை, பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு; விடைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, 2010 2011 ம் ஆண்டு முதல், ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத் தாள்கள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் 12 ம் வகுப்பினை தமிழ்வழியில் படித்து, பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நல்ல பயனை அளிப்பதாக அமைந்துள்ளது.


செம்மொழி பாடத்திட்டம்

இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளில் தமிழை ஒரு பாடப் பிரிவாகப் படிக்காமலேயே இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டங்களைப்பெற முடியும் என இதுவரை இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2008 2009 ம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதில் தேர்ச்சி பெறவேண்டும் என ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


"தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில், தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும்'' எனக் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கேற்ப; செம்மொழிப் பாடத் திட்டம் பல்கலைக் கழகங்களின் வரம்புக்குட்பட்ட கல்லூரிகளில் 2010 2011 (இரண்டாம் பருவம்) முதல் பி.காம். பி.சி.ஏ, பாடப்பிரிவுகள் நீங்கலாக அனைத்துப் பாடப் பிரிவுகளிலும்; 2011 2012 முதல் பி.காம். பாடப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.


புதிதாக பொறியியல் கல்லூரிகள்


நாடு சுதந்திரம் அடைவதற்குமுன் அரசு சார்பில் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன; 2005 2006 ம் ஆண்டுவரை 6 பொறியியற் கல்லூரிகள்தான் செயல்பட்டன. 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றுகூட தொடங்கப்பட வில்லை.


ஆனால், 2006 ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின், ஐந்தாண்டுகளில் திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், அரியலூர், ஆரணி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டு தற்போது 18 அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.


சட்ட திருத்தம்


அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாக முந்தைய அரசால் மாற்றப்பட்டன. இத்திட்டத்தில் எதிர்பார்த்த பயன்களை அடைய முடியவில்லை. இதனால் நிலவிவந்த குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்யும் முகத்தான் அரசு கல்லூரிகளுக்கு முன்னர் இருந்த தகுதியினை மீளவும் அளிப்பதென இந்த அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில், அனைத்து உறுப்புக் கல்லூரிகளும் இனிமேல் மீண்டும் முழு அளவிலான அரசு கல்லூரிகளாக செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தப்பட்டன.

இவ்வாறு அறிக்கையில் முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment