கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 4, 2011

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தர 05.03.2011 அன்று கடைசி : அறிவாலயம் திக்குமுக்காடியது




இதுவரை 10 ஆயிரம் மனுக்கள் :
சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட இதுவரை 10 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். 04.03.2011 அன்று மதியம் வரை மட்டும் 2 ஆயிரம் பேர் விருப்ப மனு செய்தனர்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனுக்களை தருவதற்கு 05.03.2011 அன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விருப்ப மனுக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று வரை 8 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். 04.03.2011 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். இன்னும் விருப்ப மனுக்கள் கொடுக்க ஏராளமானோர் வந்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர் எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் கொடுத்தனர்.
04.03.2011 அன்று காலை அமைச்சர் கீதா ஜீவன் - தூத்துக்குடி, முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி - திருச்செந்தூர், சாத்தூர் ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, தங்கம் தென்னரசு - திருச்சூழி, சுப.தங்கவேலன் - திருவாடனை, சட்டப்பேரவை துணை தலைவர் வி.பி.துரைசாமி - ராசிபுரம் பெரிய கருப்பன் - திருப்பத்தூர். கே.பி.பி.சாமி - திருவொற்றியூர், கே.பி. பழனிசாமி - அரவக்குறிச்சி. வேலுச்சாமி - மதுரை வடக்கு உள்ளிட்ட ஏராளமானோர் மனுக்கள் தந்தனர்.
திருத்தணி தொகுதியில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என்று கூறி திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஈஸ்வரப்பன் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தார். திருவள்ளூரில் இ.ஏ.பி. சிவாஜி போட்டியிடவும் அவர் மனு கொடுத்தார். தவிர, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வீனஸ் வீர.அரசு விருப்ப மனு கொடுத்தார். தவிர, விருப்ப மனு கொடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த கட்சியினர் அணிவகுத்ததால் அறிவாலயம் திக்குமுக்காடியது.

ஒரே நாளில் 4000 பேர் விருப்பமனு - களைகட்டியது அறிவாலயம் :

சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட 04.03.2011 அன்று ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் தருவதற்கு 05.03.2011 அன்று கடைசி நாள் ஆகும்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனுக்களை தருவதற்கு 05.03.2011 அன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் 04.03.2011 அன்று திரண்டு வந்து விருப்ப மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் பெறப்பட்ட கலைஞர் அரங்கிலும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஜன்னல், கதவு கண்ணாடிகள் நொறுங்கின. இதையடுத்து மனுக்கள் பெறும் இடம், வெளிப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சுமார் 15 கவுன்டர்கள் திறக்கப்பட்டு விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன.
04.03.2011 அன்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இரவு வரை இடைவிடாது மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் கொடுத்தவர்களில் ஏராளமானோர் பெண்கள்.

நிதியமைச்சர் அன்பழகனுக்காக வில்லிவாக்கம் தொகுதியில் கோ.சிட்டிபாபு, ச.மனோகரன், முனுசாமி தாஸ், ஆனந்த ராஜ் ஆகியோர் மனுக்கள் தந்தனர். அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்காக அண்ணாநகர் தொகுதிக்கு ஐ.சி.எப். தொழிற்சங்க தலைவர் கென்னடி ராமச்சந்திரன் மனு செய்தார். அமைச்சர் கீதா ஜீவனுக்காக தூத்துக்குடி தொகுதிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மனு கொடுத்தார். ஈஸ்வரப்பா - திருத்தணி, பி.வேணு, பி.ஜி.கோவிந்தராஜ் - கும்மிடிப்பூண்டி, பேரூர் நடராஜன் - கிணத்துகடவு, பூச்சி முருகன் - மயிலாப்பூர்.
தா.விஸ்வநாதன் - சோளிங்கநல்லூர், வி.கோவிந்தன் - குடியாத்தம், மா.உமாபதி - விருகம்பாக்கம், மனோகரன் - தர்மபுரி, மகேந்திரன் - ஜோலார்பேட்டை, சேடப்பட்டி முத்தையா - திருமங்கலம், எல்.பலராமன் - துறைமுகம், செஞ்சி சிவம் - திரு.வி.நகர்., க.சுந்தரம் - பொன்னேரி.
மு.க.தமிழரசுக்காக துறைமுகம் பகுதிக்கு மணிவேலன், வி.பி.மணி - ராமநாதபுரம், விஜய் கமல்ராஜ் - பர்கூர், ஓசூர், திலகவதி - முசிறி, கலைஞர் தமிழ் பேரவை நிர்வாகிகள் பி.ஏ.கணேசன் - திருப்பூர் தெற்கு, கே.சேகர் - செஞ்சி, விஜயராகவன் - கவுண்டம்பாளையம், ராசபிரபு - நன்னிலம், ராஜேஷ் கண்ணன் - மயிலாப்பூர், ராஜ்குமார் - கிருஷ்ணராயபுரம் ஆகியோர் மனுக்கள் தந்தனர்.



No comments:

Post a Comment