கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 3, 2011

திமுகவுடன் புரட்சிபாரதம் பேச்சுவார்த்தை


கடந்த சட்டமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு அரக்கோணம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி போட்டியிட்டு வென்றார்.

இந்நிலையில் 03.03.2011 அன்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றனர்.

அங்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தேர்தல் குழுவினரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம்,

’’தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். எங்கள் கட்சிக்கு 4 தொகுதிகள் கேட்டுள்ளோம். ஆனால் தி.மு.க. குழுவினர் ஒரு தொகுதி தருவதாக கூறினர். அடுத்த கட்டமாக மீண்டும் பேச உள்ளோம். அப்போது உடன்பாடு ஏற்படும்’’ என்று தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணிக்கு நாடார்கள் ஐக்கிய சங்கம் ஆதரவு :

திரைப்படத் தயாரிப்பாளர் ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் தலைமையில் வடசென்னையில் வாழும் திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான் குளம் தாலுகா நாடார்கள் ஐக்கிய சங்கத்தின், தலைவர் ஆர்.பி.மனோகரன், பொதுச் செயலாளர் டி.அரசு வேல், பொருளாளர் எல்.சுப்பிரமணியன் மற்றும் எஸ்.சின்ன துரை, எஸ்.பி.சுதந்திராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் 03.03.2011 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்தனர்.


அப்போது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாள்தோறும் இயங்கிட உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்போம் என்று உறுதி அளித்தனர்.

அப்போது கழக பொருளாளர் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கனிமொழி எம்.பி., துணை பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், தொகுதி பங்கீட்டு குழு வினரான டி.ஆர்.பாலு, அமைச்சர் பொன்முடி, அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment