கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு : திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்து


திமுக & காங்கிரஸ் இடையே நிலவிவந்த தொகுதி பங்கீடு பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இன்று கையெழுத்திட்டனர். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இரு கட்சிகளின் குழுவினரும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31, விடுதலை சிறுத்தைகளுக்கு 10, கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7, முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதால் மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுப்பதற்காக டெல்லி சென்றனர்.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். இரு கட்சிகளிடையே சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது.
பாமகவும், முஸ்லிம் லீக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றை விட்டுத்தர சம்மதித்தன. இதையடுத்து, காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி 08.03.2011 அன்று அறிவித்தார். இதையடுத்து, தொகுதிப் பங்கீட்டில் நீடித்த சிக்கல் தீர்ந்தது. திமுக 121 இடங்களிலும் காங்கிரஸ் 63 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 09.03.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
63தொகுதிகள் விவரம்: ஐவர் குழுவினர் நாளை பேச்சு
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், ‘தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்துபேசி, காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 63 தொகுதிகளை பங்கிட்டு கொள்வதென முடிவு செய்யப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, “டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளுக்காக மக்கள் இந்த அணியை ஆதரிப்பார்கள். காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது குறித்து இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் நாளை பேசுவார்கள்” என்றார்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்கனவே, ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் குழுவினரும் திமுக குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி ஓரிரு நாளில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சிக்கான தொகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment