தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் 09.03.2011 அன்று தொடங்கியது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகளுக்கு நேற்று அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. 2-வது நாளாக 10.03.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட தொகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.
தூத்துக்குடி தொகுதிக்கு அமைச்சர் கீதாஜீவன், வக்கீல் செங்குட்டுவன், டேவிட் செல்வன், கிருஷ்ணன் உள்பட 7 பேரிடம் நேர்காணல் நடந்தது.
திருச்செந்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்திருந்த அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி ராதிகாசெல்வி, என்ஜினீயர் முத்து செல்வன், உடன்குடி ஒன்றிய செயலாளர் சக்திவேல், பார்வதிமுத்து, வக்கீல் சாத்ராக் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
இது போல் விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், கோவில் பட்டி ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடமும் நேர்காணல் நடந்தது.நேர்காணல் நடப்பதையொட்டி அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதி, நேர்காணலக்கு வந்திருந்தவர்களை தனித் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது வெற்றி வாய்ப்பு உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அறிந்தார். நேர்காணலின் போது, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பழகன், மு.க.அழகிரி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment