கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 6, 2011

தமிழகம், புதுவையில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 14,000 பேர் விருப்ப மனு


தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பி 14,000 பேர் மனு கொடுத்துள்ளனர். இவர்களிடம் 18ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக நேர் காணல் நடத்தப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்புகிறவர்கள், கடந்த 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் அளித்து வருகின்றனர்.
தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய திமுக பிரமுகர்கள், பெண்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி, துணை முதல் வர் ஸ்டாலின் உள்ளிட் டோர் தங்கள் தொகுதிகளில் போட்டியிட வேண் டும் என்று திமுகவினர் பலர் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். 04.03.2011 அன்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரம் மனுக்களை கொடுத்தனர்.
விருப்ப மனு அளிக்க 05.03.2011 அன்று கடைசி நாள் என்பதால், அமைச்சர்கள் உபயதுல்லா (தஞ்சை), மைதீன்கான் (பாளை), மேயர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), மாலைராஜா எம்எல்ஏ (பாளை), தி.சி.விஜயன் (திருவொற்றியூர்), காசிமுத்துமாணிக்கம் (அறந்தாங்கி), நாடார் இயக்க தலைவர் கராத்தே சரவணன் மற்றும் ஹெலன் ஆகியோர் 42 தொகுதிகளுக்கு முக்கிய தலைவர்கள் போட்டியிடவும், சகோதரி பவுண்டேஷன் இயக்குனர் திருநங்கையான கல்கி (பொள்ளாச்சி) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேற்று விருப்ப மனு வாங்கி பூர்த்தி செய்து அளித்தனர். இறுதி நாளாக 05.03.2011 அன்று வரை திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 14,000 பேர் மனு அளித்துள்ளனர்.
விருப்ப மனு பெறப்பட்டவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட வாரியாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடத்துகிறார். 13ம் தேதி புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுகவில் விருப்ப மனுவுக்கு அவகாசம் நீட்டிப்பு :

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தோடு திமுகவினர், தலைமை கழகத்தில் ஆயிரக்கணக்கில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இதற்கு காலக்கெடு 5ம் தேதியுடன் முடிவடைந்த தால், மேலும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக் கையை தொடர்ந்து கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. நாளை வரை கட்சியினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.



No comments:

Post a Comment