கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

தி.மு.க - மூ.மு.க பேச்சுவார்த்தை


தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தி.மு.க. குழுவினருடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளன.

இந்நிலையில் 22.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கட்சி நிர்வாகிகள் ரவி வாண்டையார், நம்பிவயல் ரவீந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் கூறுகையில்,

எங்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 30ந் தேதி தஞ்சையில் நடந்தது. அதில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மான கடிதத்தை இன்று தி.மு.க. குழுவினரிடம் வழங்கினோம். தமிழ்நாட்டில் 70 தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். எங்களுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது முடிவாகும். இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடரும். இந்த கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்றார்.


No comments:

Post a Comment